மார்கோ படத்தில் என் காட்சிகளை மட்டும் தூக்கி விட்டார்கள் - விரக்தியில் ரியாஸ்கான் சொன்னது
மலையாள மொழியில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உன்னி முகுந்தன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் மொழியில் கூட சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் அதிகம் மலையாள மொழியில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த படம் தான் மார்கோ.
இந்தப் படத்தை இயக்குனர் ஹனிப் இயக்கியிருக்கிறார். கே ஜி எஃப் மற்றும் சலாம் படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்சூர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரில்லர் படமான இந்த மார்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலுமே இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குறிப்பாக, வட கொரியாவில் பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது.
மார்கோ படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து ரியாஸ்கான் நீக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக படம் வெளியான போது அவருடைய காட்சிகள் ஒன்று கூட படத்தில் வரவில்லை. இதை கண்டு ரியாஸ்கானே பேரதிர்ச்சி அடைந்தார். படத்தினுடைய நீளம் அதிகமாக இருந்ததாலும், படத்தின் இறுதி வடிவத்தின் போது தவிர்க்க முடியாத காரணத்தினால் ரியாஸ்கான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டதாக இயக்குனர் தரப்பில் சொல்லப்பட்டது.
https://www.youtube.com/shorts/SEH73AE_Fg4
ரியாஸ் கான் வருத்தம்:
மேலும், ஏற்கனவே கேறி ரிவா மோனே என்ற வசனத்தை உன்னி முகந்துடன் சேர்ந்து ரியாஸ்கான் பேசி இருந்த ரீல்ஸ் வீடியோ எல்லாம் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டதற்கு ஒரு காரணம் ரியாஸ்கான் என்று சொல்லலாம். ஆனால், அப்படிப்பட்ட இந்த வெற்றிப்படத்தில் ரியாஸ்கான் இல்லாதது பலருக்குமே வருத்தம் தான். இயக்குனர் உடைய முடிவு அது. அதற்கு நான் என்ன செய்வது? என்ற விரக்தியிலும் ரியாஸ்கான் பேட்டியில் கூறியிருந்தார்.
ரியாஸ் கான் குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ் கான். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது ரியாஸ் கான் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்து வருகிறார்.
ரியாஸ்கான் குடும்பம்:
அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியலான ‘இனியா’ தொடரில் நடித்து இருந்தார். இதற்கிடையே இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ்கான் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். சமீபத்தில் தான் இவர்களது மகன் ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.