என்னுடைய ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையாது- நிகழ்ச்சிக்கு பின் ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு

By subhashini · 20/12/2024

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ஆர்.ஜே ஆனந்தி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 74 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். அதில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தங்களுடைய பார்ட்னர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் ஜெஃப்ரி, ராணவை கீழே தள்ளி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதனால் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சவுந்தர்யா கிண்டலாக பேசி இருந்தார். அதற்குப்பின் ராணவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதனால் போட்டியாளர்கள் வருத்தப்பட்டு ராணவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்கள்.

ஆர்.ஜே.ஆனந்தி பதிவு:

இப்படி நாளுக்கு நாள் கலவரமாக நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு நடிகை ஆர்.ஜே ஆனந்தி அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ரொம்ப விஷமத்தனமான எண்ணம் கொண்டவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே தான் இருக்கிறார்கள். ஆனால், போட்டியாளர்கள் மத்தியில் இந்த மாதிரியான எண்ணங்கள் கிடையவே கிடையாது. போட்டியாளர்கள் வில்லன்களும் கிடையாது, ஹீரோக்களும் கிடையாது.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்னது:

அவர்கள் தவறு செய்யக்கூடிய சாதாரண மனிதர்கள் தான். என்னுடைய ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையாது. என்னால் ஒருவருடைய கொள்கை பரப்பு செயலாளராக இருக்க முடியாது. என்னுடைய ஹவுஸ் மேட் தான் போட்டியை வெல்லப் போகிறார்கள். அவர்களுடைய சொந்த முயற்சியில், சொந்த திறமையில் வெற்றி பெறட்டும். அதுதான் சரியானது என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full