நானும் படம் எடுக்கறவன் தான். தப்பி தவறி கூட அனிமல் படத்த பாக்க மாட்டான் - RJ பாலாஜி சொன்ன காரணம்.

By Rajkumar · 19/1/2024

அனிமல் படம் குறித்து நடிகர் ஆர் ஜே பாலாஜி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அனிமல். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர் ஜே பாலாஜி பேட்டி:

மேலும், இந்த படம் வெளியாகி மூன்று வாரத்திலேயே 862 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இந்த படம் பெண்களுக்கு எதிரானது, படம் முழுவதும் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி அளித்த பேட்டியில், நான் இன்னும் அனிமல் படம் பார்க்கவில்லை. எனக்கு பார்க்கத் தோன்றவில்லை. காரணம், ஒரு ஆயிரம் பேர் இருக்கும் தியேட்டரில் ஒரு பெண்ணை அடிப்பது, அரைகுறையாக நிறுத்துவது.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

அனிமல் படம் குறித்து சொன்னது:

அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பார்த்து கைதட்டுவதை நான் விரும்பவில்லை. இந்த படத்தில் பெண்ணைப் பற்றி இழிவு படுத்தி வந்ததாக நிறைய பேர் சொன்னார்கள். நான் அந்தப் படத்தை பார்த்து ஒருவேளை என்னுடைய படத்திலும் அந்த மாதிரி வைக்கலாம் என்று எண்ணம் வந்துவிடும் என்பதால் தான் நான் போகவில்லை. அதோடு எனக்கு அனிமல் படம் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர் ஜே பாலாஜி திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

ஆர் ஜே பாலாஜி படங்கள்:

அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார்.இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சமீப காலமாக இவர் இயக்கி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full