கருப்பு படத்தின் கதை இப்படி தான் உருவானது - உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி

By subhashini · 25/5/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இது சூர்யா உடைய மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கிறது. கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கருப்பு படம்:

இதை அடுத்து படத்தின் ஹீரோ சூர்யா, ஆர்ஜே பாலாஜி, தயாரிப்பாளர் என பலருமே நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆர்.ஜே பாலாஜி, நான் ஒரு முறை பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு வழக்கம் நடைமுறையில் உள்ளது. நம் வாழ்க்கையில் தீராத பெரிய பிரச்சனையோ, பகையோ இருந்தால் மனதார வேண்டிக்கொண்டு அம்மனுக்கு மிளகாய் அரைச்சி தடவினால் சாமி உடனடியாக நியாயம் வழங்கும் என்பது மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. நான் நிகழ்ச்சியாக அந்த கோயிலுக்கு போனபோது இந்த விஷயத்தை கேள்வி பட்டேன்.

பாலாஜி பேட்டி:

அதற்கு பிறகு தான் கருப்பு படத்தினுடைய கதையை எழுத தொடங்கினேன். அதோடு எனக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு முறை நான் பேசன் பிரிட்ஜ் சிக்னலில் இருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் என் கழுத்திலும் வயிற்றிலும் கத்தியை வைத்து மிரட்டி நகையை அடித்துக் கொண்டு சென்றார்கள். பின் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு நகையை கண்டுபிடித்தார்கள். ஆனால் நீதிமன்றத்திற்கு நிறைய அலைந்தேன். உடனடியாக திரும்ப வாங்க முடியவில்லை. அப்போதெல்லாம் நான் சினிமாவுக்குள் வருவேன் என்று தெரியாது.

https://www.youtube.com/watch?v=d3yg5BafWmk

படம் உருவான விதம்:

சினிமாவிற்கு வந்து எல்கேஜி போன்ற படங்களை எடுத்த போது தான் இந்த சம்பவத்தை ஏன் ஒரு படமாக மாற்றக்கூடாது என்று எனக்கு எண்ணம் வந்தது. இருந்தாலுமே கதைக்கான ஐடியா ரொம்ப சின்னதாக இருந்தது. அது எப்படி பெரிய அளவில் கொண்டு செல்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் திடீரென்று மாசாணி அம்மன் கோவில் நம்பிக்கை என் மனதிற்குள் வந்தது. அந்த சம்பவம் இணைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அப்படிதான் கருப்பு படத்தின் உடைய கதை உருவானது. எல்லாவற்றிற்குமே கடவுள் தான் காரணம். இந்த அளவிற்கு பிரமாண்டமான வெற்றியாக மாற்றியதும் அவர்தான் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full