ஏ.ஆர். ரஹ்மான் இடத்தில் சாய் அபயங்கர் வந்தது எப்படி? இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

By subhashini · 24/3/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் இருந்து முதல் சிங்களான காட் மேட் வெளியாகியிருந்தது.
இந்த படம் மே 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

கருப்பு படம்:

இது ஒரு பக்கம் இருக்க கருப்பு படத்திற்கு முதன் முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. அவர் விலகிய பிறகுதான் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு ஒப்பந்தமானார். ஆனால், இதற்கான காரணம் என்றவென்று தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆர் ஜே பாலாஜி,
பொதுவாகவே பலர் ஏ ஆர் ரகுமான் சார் போன்ற பெரிய இசை அமைப்பாளர் ஒரு படத்தில் இருந்து விலகினால் அடுத்து வரும் இசையமைப்பாளரும் அதே லெவலில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், நான் அப்படி பார்க்கவில்லை.

ஆர் ஜே பாலாஜி பேட்டி:

இந்த படத்திற்கு முன்பு நான் சாய் அபயங்கரை சந்தித்ததே கிடையாது. அவரிடம் நான் அபரிதமான எனர்ஜியை பார்த்தேன். அந்த எனர்ஜியை முழுமையாக பயன்படுத்த விரும்பினேன். அதை தயாரிப்பு குழுவிடமும் சூர்யா சாரிடமும் சொன்னேன். அது எல்லோருக்குமே சர்ப்ரைஸாக இருந்தது. காரணம், ஏ ஆர் ரகுமான் சாரை விட்டு ஒரு புதியவரை கொண்டு வருவது பெரிய மாற்றம். ஆனால், நான் என்னை நம்புங்கள் என்று சொன்னேன். இது சாய் அபயங்கரின் முதல் பெரிய படம்.

https://www.youtube.com/watch?v=uqGHrmtrtPA

சாய் அபயங்கர் பற்றி சொன்னது:

இப்போது அவர் இதுபோன்ற பல ப்ராஜெக்ட் கமிட் ஆகி இருக்கிறார். சாய் அபயங்கர் உடன் நீங்கள் தொடர்ந்து உட்கார்ந்து வேலை வாங்கணும் என்பதெல்லாம் நினைக்க தேவையில்லை. அவர் ஏதாவது ஒன்றை கொடுத்து விடுவார். நேரம் தேவைப்பட்டால் தெளிவாக சொல்லுவார். அந்த தெளிவுதான் ப்ராசசை சுலபமாக்கியது. ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் அதன் சொந்த இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஜெனரேஷன் அவருடைய பாடல்களை இன்னும் அதிகம் கேட்கப் போகிறது என்று நினைக்கிறேன். நான் அவருக்கு கிட்டத்தட்ட எந்த ரெபெரென்ஸ்மே கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full