மேடையில் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி- முழு விவரம் இதோ

By subhashini · 24/11/2024

சிவகார்த்திகேயனைக் கிண்டல் செய்ததற்கு பிரபல நடிகர் மன்னிப்பு கேட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.

அமரன் படம்:

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது டாக் ஆஃப் டவுன் ஆக சிவகார்த்திகேயன் அமரன் படம் தான் சென்று கொண்டிருக்கின்றது.

ஆர்.ஜே.பாலாஜி பேட்டி:

இதை அடுத்து இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல நடிகரும், இயக்கருமான ஆர் ஜே பாலாஜி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது பேட்டியில் ஆர்.ஜே .பாலாஜி சொன்னது, நான் ஒரு விருது விழா ஒன்றில் எல்லா பிரபலங்களையுமே கேலி,கிண்டல் செய்து கலாய்க்கும் வகையில் சில விஷயங்களை பேசி இருந்தேன்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

அதில் சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் எமோஷனலாக பேசியதை பற்றி எல்லாம் கிண்டல் செய்யும் விதத்தில் நான் பேசிவிட்டேன். ஆனால், அப்போது எனக்கு அது தவறாக தெரியவில்லை. அதை நான் டிவியில் பார்க்கும்போது தான் தவறு என்று புரிந்தது. உடனடியாக நான் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பும் கேட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தான் மீடியா பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது படங்களை இயக்கியும் நடித்து வருகிறார். இவர் இயக்கிய எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full