கருப்பு படத்தின் கதை தளபதி விஜய்க்கு எழுதப்பட்டது? ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த நச் பதில்

By subhashini · 24/3/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கிறார். இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு படம்:

சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் இருந்து முதல் சிங்களான காட் மேட் வெளியாகியிருந்தது.
இந்த படம் மே 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் ஆர் ஜே பாலாஜி, கருப்பு படத்தினுடைய கதையை நான் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எழுத தொடங்கிவிட்டேன். ஐடியா பெரிதாகி மிகவும் எக்சைட்டிங்காக மாறியதால் இந்த படத்துக்கு ஒரு ஸ்டார் தேவை என்று தோன்றியது. அந்த இடத்தில் விஜய் இருந்தால் சூப்பராக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆர் ஜே பாலாஜி பேட்டி:

2021- 2022 இல் விஜய் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் கேட்டிருந்தார். நான் அப்போதே அவரிடம் ஒரு கதையை சொன்னேன். அதைக் கேட்ட பிறகு விஜய், இது ரொம்ப பெரியது. இதை இப்போதே தொடங்கிடலாமா? என்றெல்லாம் கேட்டார். நான் என்னுடைய சொந்த படத்திற்கு கூட அவசரப்பட மாட்டேன். விஜய் சார் படத்திற்கான வேலை என்றால் இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொள்வேன் என்று சொல்லி
அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன். விஜய் சாருக்கு என்னுடைய ஐடியா பிடித்து இருந்தது. அது ஒரு பெரிய ஐடியா என்று அவர் உணர்ந்தால் விஜய் சாரினுடைய ஸ்டைலில் ஏதாவது வேண்டும் என்று சொன்னார்.

விஜய் பற்றிய கதை:

எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களை போல இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த கதையில் அப்படியான விஷயங்கள் இருக்கிறது. அதே சமயம் இந்த கதையில் பெரிய ஸ்டாருக்கு ஏற்ற விஷயங்களும் இருந்தது. ஆனால் அப்போதுதான் அவர் அரசியலுக்கு வந்தார். அதனால் தான் அது நடக்கவில்லை. அதற்கு பிறகு கதையை நான் சூர்யா சாரிடம் சொன்னேன். அவரும் ஒத்துக்கொண்டார். அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் கதைகளில்செய்தேன். சூர்யா சார் என்னை 200% நம்பினார். நான் எதை சொன்னாலும் கேள்வி கேட்காமல் சூர்யா சார் செய்தார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையும் எனக்கு தந்த சுதந்திரமும் என்னுடைய பொறுப்பை இரட்டிப்பாக்கியது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full