தியேட்டரில் நாங்க காசு கொடுத்து சாமி ஆட சொன்னோமா? - ஆர் ஜே பாலாஜி கொடுத்த விளக்கம்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் பல்வேறு திரையரங்குக்கு ஆர்.ஜே பாலாஜி அவர்கள் தியேட்டர் விசிட் சென்று வருகிறார். அந்த வகையில் இவர் திருப்பூருக்கு சென்று தியேட்டர் விசிட் அடித்து விட்டு பிரஸ்மீட் கொடுத்திருக்கிறார்.
கருப்பு படம்:
அதில் அவர், எனக்கு சாமி பக்தி அதிகம். எல்லோருக்கும் சாமி பக்தி இருக்கும். நான் ரெண்டு படம்தான் பண்ணி இருக்கேன். எல்லா படத்திலும் அதே மாதிரி பண்ணவில்லை. இரண்டு சாமி படம் பண்ணிருக்கிறேன். நல்ல படம் பண்ணினால் மனதில் நின்று விடும் என்று நினைக்கிறேன். இப்போ சாமி படம் பண்ணதால் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். கருப்பசாமி நம்முடைய எல்லைசாமி. ஜாதி மதம் எல்லாம் கருப்புசாமிக்கு கிடையாது.
ஆர் ஜே பாலாஜி பேட்டி:
எந்த ஊராக இருந்தாலும் ஊரை விட்டு வெளியே போகும் போதோ, ஊருக்கு வரும்போது கருப்பு சாமியை வணங்கிட்டு தான் போவார்கள். அப்படி மக்கள் அனைவரும் அவர்களுடைய சாமியாக நினைத்து படத்தை வந்து பார்த்து கொண்டாடுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸ் ஆக தான் படம் பண்ணினேன். விமர்சனம் பண்ணவர்களுக்கு, ஆன்லைனில் இருக்கிறவர்களுக்காக நான் படம் பண்ணவில்லை.நான் படம் ரிலீசுக்கு முன்னாடியே இந்த விஷயத்தை சொல்லி இருந்தேன்.
https://www.youtube.com/watch?v=eqzd-FGVLb0
விமர்சனங்களுக்கு விளக்கம்:
இது மக்களுக்காக பண்ணிய படம். அதனால் மக்கள் இந்த படத்தை கொண்டாடுவாங்க என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சில பேர், படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டரில் சாமி ஆடுறதுக்கு ஆள் அனுப்பி விடுவாங்கன்னு சொன்னாங்க. எங்களாலேயே இவ்ளோ பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பி இருக்க முடியாது. மக்களே இந்த படத்தை அவங்க படமா நினைத்துக் கொண்டாடுவது தான் ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.