நான் சங்கியா? திமுக ஆதரவாளனா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கருப்பு பட இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி

By subhashini · 25/5/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இது சூர்யா உடைய மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கிறது.

கருப்பு படம்:

இந்த படம் சூர்யா உடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தே என்று சொல்லலாம். கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து படத்தின் ஹீரோ சூர்யா, ஆர்ஜே பாலாஜி, தயாரிப்பாளர் என பலருமே நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், கருப்பு படத்தின் வெற்றிக்கு கருப்புசாமிக்கு 18 அடி அரிவாளை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி சாத்தியிருக்கிறார்.

பாலாஜி பேட்டி:

இது தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இதற்கிடையில் கடவுளை மையமாக வைத்து எடுத்து வருவதால் ஆர் ஜே பாலாஜியை சங்கி என்று சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆர்.ஜே பாலாஜி, என்னை பாஜக, ஆர் எஸ் எஸ் தொண்டன், திமுக ஆதரவாளன் என்று என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால், பொது மக்களுக்கு என்னை பற்றி நன்றாகவே தெரியும். படத்தின் ரிலீஸ் இருக்கும் முந்தைய நாள் எனக்கே தெரியாமல் ஒரு வீடியோவில் நான் உடைந்து அழுந்து விட்டேன்.

https://www.youtube.com/watch?v=d3yg5BafWmk

விமர்சனங்களுக்கு பதிலடி:

சூர்யா சாரும் நானும் வெற்றிபெற வேண்டும் என்று மொத்த தமிழ்நாடுமே எங்களை வாழ்த்தியது. அதன் மூலம் மக்களின் உண்மையான உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் இந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை உங்களால் பார்க்க முடிகிறது. சோசியல் மீடியாவில் பகிரப்படும் சில விஷயங்கள் முற்றிலும் சம்பந்தம் இல்லாதது போல தோன்றுகிறது. நான் மக்களின் அன்பை மட்டும் தான் தேடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full