தியேட்டரில் சாமியாடுபவர்களுக்கு தயவு செய்து உதவுங்கள் - ஆர்.ஜே. பாலாஜியின் அன்பான வேண்டுகோள்

By subhashini · 18/5/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஆர் ஜே பாலாஜி, திரையரங்குக்கு சென்று கருப்பு படத்தை தங்களின் சொந்த படமாக கொண்டாடிய ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. இந்த படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பு எங்களை நெகழ்ச்சி அடைய வைத்தது.

கருப்பு படம்:

நாங்கள் படம் எடுக்க தொடங்கிய போது கற்பனை செய்து பார்த்ததை விடவும் மிக பிரம்மாண்டமாக வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் மற்றும் பல இடங்களிலிருந்தும் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் செய்தும் கண்கலங்குவதுமான செய்திகள் எல்லாம் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதைக் கேட்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. பல இடங்களில் சினிமா என்ற எல்லையை தாண்டி ஒரு மிகப்பெரிய எமோஷனல் அனுபவத்தை மக்கள் உணர்த்துவதாக சொல்கிறார்கள். சிலர் திரையரங்குக்குள்ளேயே ஒரு தெய்வீக ஆற்றலை உணர்ந்து இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை எங்கள் படத்திற்கு கிடைத்த ஆக சிறந்த ஆசி இதுதான்.

ஆர் ஜே பாலாஜி பேட்டி:

இப்படிப்பட்ட உங்களின் அளவில்லா அன்போடு சேர்த்து எங்களிடமிருந்து ஒரு சிறிய அன்போடு அன்பான வேண்டுகோள், திரையரங்கில் படம் பார்க்கும்போது உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் எவருக்காவது இது போன்ற தெய்வீக ஆற்றல் ஏற்பட்டால் தயவு செய்து அவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தேவையான இட வசதியை ஏற்பாடு செய்து தந்து குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள். திரையரங்கு ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து அவர்களை கண்ணியமான முறையில் கவனித்துக் கொள்ள உதவுங்கள். ஒரு அன்னியர்களிடமிருந்து கிடைக்கும் அந்த சிறிய இரக்க குணம் கூட புனிதமான ஒன்றுதான்.

View this post on Instagram

A post shared by Behindwoods News (@behindwoods_news)

பாலாஜி வேண்டுகோள்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களுடைய திரையரங்கு உரிமையாளர்களிடம் நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்வது ஒன்றுதான், இதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள உங்கள் ஊழியர்களை தயார் நிலையிலும் கனிவோடும் வைத்திருங்கள். ஒவ்வொரு ஆன்மீக தருணத்தையும் அதற்குரிய மரியாதை கொடுங்கள். கருப்பு படம் இப்போது பொது மக்களுக்கு சொந்தமாகிவிட்டது. திரையரங்கிற்குள் நீங்கள் கொண்டு வந்த அந்த நம்பிக்கையும் பக்தியும் தான் இந்த படத்தை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது. அந்த நம்பிக்கையை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கண்ணியத்தோடு பாதுகாப்போம் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full