மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்காததற்கு காரணம் இது தான் - ஆர்.ஜே. பாலாஜி ஓபன் டாக்

By subhashini · 12/3/2025

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர்.ஜே பாலாஜி. இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தன்னுடைய சிறு வயதில் மிக கஷ்டப்பட்டு கடுமையாக போராடி தான் இவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் வாங்கினார். அதற்கு பிறகு கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக அதனுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர்.ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார்.

ஆர்.ஜே.பாலாஜி திரைப்பயணம்:

இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.

ஆர்.ஜே.பாலாஜி படங்கள்:

இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர்.ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார். கடைசியாக ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி இருந்த படம் தான் ‘சொர்க்கவாசல்’. இந்தப் படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் என்பவர்தான் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் சூர்யாவை வைத்து படம் எடுத்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி பேட்டி:

இதை அடுத்து இவர் தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், மூக்குத்தி அம்மன் படம் வந்த பிறகு அதனுடைய இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்குவது என்று தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு இரண்டாம் பாகத்தை பற்றி எந்த ஒரு யோசனையுமே இல்லை. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதை, வேறு படம் என்று தான் இருந்தது.

மூக்குத்தி அம்மன் 2 படம்:

இப்போது என்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் சுந்தர் சி அந்த படத்தை இயக்குகிறார். அதுதான் சரியான விஷயமாக இருக்கும். இதை நான் அவரிடமே சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full