அரசியல் விஷயங்கள் டேக் ஓவர் பண்ணுது, ஆனால் கருப்பு பட ட்ரைலர் - இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி சொன்ன விஷயம்

By subhashini · 7/5/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் மே 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

கருப்பு படம்:

இதை அடுத்து சில தினங்களுக்கு முன்புதான் கருப்பு பணத்தின் உடைய இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் பகிர்ந்து இருந்தார்கள். இதை அடுத்து இந்த படத்தினுடைய ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்றும் படத்தினுடைய இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே ட்ரெய்லர் அப்டேட்டுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.ஜே பாலாஜி சொன்னது:

இப்படி இருக்கும் நிலையில் ஆர்.ஜே பாலாஜி ட்ரெய்லர் அப்டேட் குறித்து ஒரு காணொளி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் இந்த மாதிரி சீட் பெல்ட் போட்டு ஏதாவது வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட் ஓட வரேன்னு அர்த்தம். அடுத்த வாரம் இதே நேரம் கருப்பு படம் ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறோம். படத்தின் டிரைலர் ரெடி. அனைவருக்கும் ட்ரைலர் பிடிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால், இப்பொழுது இதை அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

கருப்பு பற்றி சொன்னது:

நாம் ஆசையாக ஓட்டு போட்டு ஒரு விஷயம் நடந்துட்டு இருக்கு என்ற மகிழ்ச்சியோடு இருக்கும்போது பல எதிர்பாராத திருப்பங்கள். இது எல்லாம் முடிந்து நல்ல விஷயம் நம்ம எதிர்பார்க்கிற விஷயம் சீக்கிரமாகவே நடக்கட்டும். நல்லது நடக்கட்டும். நாம் ட்ரைலரை விட்டுட்டு அதற்கு பிறகு பார்த்தால் திடீர்னு அரசியல் விஷயங்கள் பயங்கரமாக டேக் ஓவர் பண்ண கூடாதுன்னு காத்திருக்கிறோம். சீக்கிரமாக ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களை பிடித்த மாதிரி படத்தை ரிலீஸ் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமாக அடுத்த கட்ட நடவடிக்கையோடு உங்களை சந்திக்கிறேன். கருப்பன் கூட இருக்கான். கூட வருவான் நம்மள செமையா பார்த்துப்பான் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full