தயாரிப்பாளர் செய்த வேலையால் அப்செட்டான இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி - 'சூர்யா 45' பட நிலைமை என்ன?

By subhashini · 4/2/2025

சூர்யா 45 படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடந்திருக்கும் சலசலப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘கங்குவா’.

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருந்தார்.

கங்குவா படம் :

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சூர்யா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒன்று ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இது நடிகர் சூர்யாவின் 44வது படம். இந்த படத்தில் ஹீரோயினியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தான் தயாரிக்கிறது. மே மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சூர்யா 45 படம்:

இதை அடுத்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்பு மௌனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யா-த்ரிஷா இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தார். பின் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார். தற்போது சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கிறார். இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே ஏற்பட்டு இருக்கும் மோதல் குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது:

அதாவது, இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்துக்காக நீதிமன்றம் செட் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்கு சுமார் 500 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை தேவைப்படுகிறது என்று இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி கூறியிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இயக்குனர் கேட்ட அளவில் பாதி ஆர்டிஸ்ட்டுகளை தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதே மாதிரி தான் தயாரிப்பு நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது என்று கடுப்பான ஆர்.ஜே பாலாஜி ஒரு நாள் ஷூட்டிங் தொடங்காமலேயே பேக்கப் செய்திருக்கிறார். இதனால் அன்றைய நாளைக்கு தயாரிப்பாளருக்கு சில லட்சங்கள் வீண் செலவு ஆகி இருக்கிறது. இந்த தகவலை பிரபல காமெடி நடிகரான கோதண்டமே பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full