விஜயகாந்திடம் இருந்த மன வருத்தம், சிறப்புக் காட்சியை கூட பார்க்க விடாமல் செய்த மேனேஜர்கள் - இயக்குனர் செல்வமணி ஓபன் டாக்
'புலன் விசாரணை' திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அந்தப் படத்தை இயக்குனர் ஆர்.கே. செல்வமணி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராகத் திகழ்ந்தவர் ஆர்.கே.செல்வமணி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் திரை இயக்குனர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் சினிமாவில் இயக்கிய முதல் படம் 'புலன் விசாரணை'.
இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை செல்வமணி பகிர்ந்து இருக்கிறார். அதில், புலன் விசாரணை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் என்னை அழைத்து செல்வமணி இந்த படம் ஓடாவிட்டால், நான் இந்த அலுவலகத்தில் இருக்க மாட்டேன். நீ இந்த ரோட்டிற்கு கூட வரக்கூடாது என்று என்னிடம் கூறினார். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். இவர்கள் இப்படி பேசுகிறார்களே என்று எனக்கு தோன்றியது.
சிறப்பு காட்சி பார்க்க அனுமதிக்கவில்லை:
மேலும், நான் என் அப்பா, அம்மா, தங்கை ஆகியோரை படத்தின் சிறப்புக் காட்சி பார்க்க அழைத்துச் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கும் விஜயகாந்த் சரக்கும் இடையே மனவருத்தம் இருந்தது. அதனால அங்கிருந்த மேனேஜர்கள் என்னை படம் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால், தியேட்டரில் இடமில்லை என்று கூறி விட்டார்கள். எனக்கு அப்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் தான் படம் பார்க்கச் சென்றேன்.
https://www.youtube.com/watch?v=DfHEVl-o530
ஜிவி சார் கொடுத்த வாய்ப்பு:
அதோடு புலன் விசாரணை படத்தின் சில இடங்களின் விநியோக உரிமையை ஜிவி சார் பெற்றிருந்தார். அவருக்கு கோ ஆர்டினேட்டராக சேதுராமன் சார் இருந்தார். இந்த நிலையில் சேது சார், ஜிவி சாரை பார்ப்பதற்காக என்னை அழைத்துச் சென்றார். அப்போது ஜிவி சார் என்னிடம் படம் பண்ணலாமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்ல சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். நான் 50,000 வேண்டும் என்பதை குறிப்பிடும் விதமாக 50 என்றேன். அவர் 25 ஆக வைத்துக் கொள்ளலாம் என்று கூறி ஒரு செக்கை கொடுத்தார்.
25 லட்சம் சம்பளம்:
அதன் பின்னர் வேறு விஷயங்களை பேசிவிட்டு, செக்கை பார்த்தபோது, அதில் இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படியானால் அவர் எனக்கு சம்பளமாக 25 லட்சம் கொடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு கை கால் ஓடவே இல்லை. இரவு நன்றாக குடித்து சந்தோஷமாக இருந்தேன். ஆனால், மறுநாள் காலையில் ராவுத்தர் என்னைப் பார்க்க வந்தார். படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி இருக்கிறது. அடுத்த படமும் நம் அண்ணனுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார்.
விஜயகாந்த் சாருக்காக பண்ணேன்:
அதற்கு நான் ஜிவி சாரிடம் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கி விட்டேன் என்று கூறினேன். ஆனால், ராவுத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஜிவி சாரிடம் சென்று, நாம் அடுத்த படத்தில் வேலை செய்யலாமா என்று கேட்டேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நான் செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டு விஜயகாந்த் சாருடன் மீண்டும் இணைந்து, 'கேப்டன் பிரபாகரன்' பண்ணேன். அந்தப் படத்திற்கு சம்பளமாக எனக்கு 50,000 கொடுக்கப்பட்டது. விஜயகாந்த் சாருக்காக நான் அதனை செய்தேன் என்று செல்வமணி கூறியுள்ளார்.