இதனால் தான் தமிழ் சினிமாவே சீரழிகிறது - ஜின் பட விழாவில் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்

By subhashini · 23/5/2025

சினிமாவின் நிலை பற்றி ஆர்.கே.செல்வமணி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் முகென். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதன் பின் இவர் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி பாடி இருக்கிறார். அந்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இவர் வேலன், மதில் மேல் காதல் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த மை 3 என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது. தற்போது இவர் ஜின் - தி பெட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோ படத்தில் நடித்த பாவ்யா திரிகா நடித்திருக்கிறார். இந்த படத்தை டி.ஆர் பாலா இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பாலசரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி என பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜின் படம் விழா:

இந்த படம் மே 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, இந்த நேரத்தில் நான் வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். இயக்குனரிடமும் எழுத்தாளர்களிடம் நீங்கள் நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலார்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் இந்த சினிமா சீரழிகிறது.

ஆர்.கே செல்வமணி பேசியது:

இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படவில்லை. எப்போது ஒரு ஹீரோவுக்கும், ஹீரோயினிக்கும், இயக்குனருக்கும் இடையே புரிதலும் நட்பும் இல்லையோ அப்போதே அந்த படம் தோல்வியை தழுவுகிறது என்று அர்த்தம். இதை நான் என் படத்தை ஆய்வு செய்து தெரிந்து கொண்டேன். இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்களில் 7 முதல் 8 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றது.

https://www.youtube.com/watch?v=FoYphkKFJ4E

தமிழ் சினிமா நிலை:

இதன் மூலம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு 60 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலமாக தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லை தான் சொல்லணும். படம் வெற்றி பெறவில்லை என்றால் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே நஷ்டம் ஏற்படுகிறது.

செல்வமணி வைத்த கோரிக்கை:

நான் இயக்கி தயாரித்த படத்தில் உள்ள பாடலை மூன்று மேடையில் பாடினால் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி லட்சங்களை யார் யாரோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒரு ரூபாய் கூட என்னை வந்து சேரவில்லை. இது போன்ற பிரச்சனைகளை சரி செய்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். என்னுடைய தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full