தமிழ் சினிமாவை இந்த நோய் தான் அழித்து கொண்டிருக்கிறது- ஆர்.கே. செல்வமணி ஆதங்கம்
கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரீலீஸ் குறித்து இயக்குனர் ஆர்.கே செல்வமணி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். இந்த படம் திரையரங்கில் 300 நாட்களுக்கும் மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
கேப்டன் பிரபாகரன் படம்:
தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் விஜயகாந்த்திற்கு 'கேப்டன் விஜயகாந்த்' என்று பெயர் வந்தது. மேலும், இந்த படம் 36 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது ஒட்டி பிலிம்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதோடு இந்த படத்தினுடைய மறு வெளியீட்டை ஒட்டி சென்னை கமலா திரையரங்கில் படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது.
https://www.youtube.com/watch?v=nlDxC21uVbY
ஆர்.கே.செல்வமணி பேட்டி:
இதில் பட குழுவினர் பலருமே கலந்து கொண்டு படம் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து இருந்தார்கள். இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, ஒருவர் 100 கோடி சம்பளம் வாங்கினால் உடனே எனக்கும் 100 கோடி சம்பளம் வேண்டும் என்று நினைப்பது, அந்தப் படம் ஆயிரம் கோடி வசூலித்து விட்டது என்றால் உடனே என் படமும் ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழ் சினிமா நிலை:
இந்த நோய் தான் தற்போது தமிழ் சினிமாவை கெடுத்துக் கொண்டிருக்கின்றது. என்னுடைய படம் ஓட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அந்த படத்தை தாண்டி ஓட வேண்டும் என்று நினைப்பது சரியான போட்டி கிடையாது. ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு படம் நிறைய வசூல் செய்வது வேறு. ஆனால், ஒரு மோசமான படம் அதிக வசூல் செய்வதால் அது நல்ல படம் ஆகி விடாது. கேப்டன் பிரபாகரன் வெளியான போதே வெறும் 90 திரையரங்குகளில் படம் ஓடி இருந்தது.
https://www.youtube.com/watch?v=SGwGB65fe_0
ஆர்.கே.செல்வமணி குறித்த தகவல்:
இப்போது 500க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராகத் திகழ்ந்தவர் ஆர்.கே.செல்வமணி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் திரை இயக்குனர் மட்டுமே இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் சினிமாவில் இயக்கிய முதல் படம் ‘புலன் விசாரணை’.
அதன் பின் இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவது இல்லை.