எனக்கு படம் இல்லை தான், ஆனால் சுயமரியாதை முக்கியம் - வேதனையில் ஆர்.கே.செல்வமணி
5 ஸ்டார் பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஆர்.கே.செல்வமணி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தங்களுடைய படத்தில் நடிப்பதாக சொல்லி முன் பணம் வாங்கிவிட்டு இதுவரை படப்பிடிப்புக்கு கால்ஷீட் கூட அளிக்காமல் இருக்கிறார் என்று பைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி குற்றம் சாட்டி இருந்தார். மேலும், இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் (fefsi) ஆர்.கே செல்வமணி கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர், R.K.செல்வமணி அவர்களுக்கு 06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations LLP பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு திரு.தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன் முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன்.
அதனைப் புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு.தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்குப் படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN pictures திரு.ஆகாஷ் அவர்களின், "இட்லிகடை படப்பிடிப்பு நடக்கவேண்டும், மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ? மேலும், October 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்.
5 ஸ்டார் அறிக்கை:
நாங்கள் புதிதாகப் படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே திரு. தனுஷ் அவர்கள் நடித்த 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களைத் தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன். அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம்.
ஆர்.கே.செல்வமணியிடம் கேள்வி:
October 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு, இன்று திரு.கதிரேசன் பிரச்னை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது. மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே, நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை. தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே.. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=l6T2QRng6Zw
விழாவில் ஆர்.கே.செல்வமணி சொன்னது:
இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக நிகழ்ச்சியில் ஆர்கே செல்வமணி, இப்போது 60 வயது கடந்து கடந்து விட்டேன். பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பாக கலைச்செல்வி வெளியிட்டிருந்த அறிக்கையை பார்த்து ரொம்ப வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னை போல் நன்மை செய்தவர்கள் யாருமே இருக்க முடியாது. பொறுப்பில் இருந்த அதிகாரிகள், இப்போது இருக்கும் அதிகாரிகள் யாருமே நான் செய்த அளவிற்கு நன்மைகளை செய்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழல்களுக்கு எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்களை எதிர்ப்பதற்கு எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லிருக்கிறோம். எந்த ஈகோவும் இல்லாமல் அழைக்கும் போதெல்லாம் சென்றிருக்கிறோம். பல நாட்கள் அவர்கள் அங்கு இல்லாமல் திரும்பி வந்திருக்கிறோம். பல மணி நேரமும் அவர்களுக்காக காத்திருக்கிறோம். தமிழ் சினிமா சரியான திசையில் செல்வதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றாக இருந்தால்தான் முடியும் என்பதை யோசித்து தான் நான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.
சுயமரியாதை பற்றி சொன்னது:
அவர்களுடைய புரிதல் இல்லாமைக்கு நான் எதுவும் பண்ண முடியாது. மேடைக்கு அனைத்து தயாரிப்பாளர்களை அழைத்து வாருங்கள். அங்கு நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் திருத்தி கொள்கிறேன். ஏற்கனவே பெப்சிக்கு பல கெட்ட பெயர்கள் வந்திருக்கிறது. எங்களை அடியாட்களாக இல்லாமல் போராளியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ் சினிமா சரியான பாதையில் திட்டமிட்டு எல்லா பணிகளையும் செய்வதற்கு கஷ்டமான ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், இன்று வரை அவர்கள் கையெழுத்தே போடவில்லை. எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் கேட்காமல் நான் செய்து கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அரசுக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்படுத்தும் முயற்சிகள் எல்லாம் செய்து பொய்யான குற்றசர்களை முன் வைத்தனர். தொழிலாளர்கள் கூலியாக இல்லாமல் தொழிலாளியாக மாற வேண்டும் என்று முயற்சிக்கும் போது தான் என்னுடைய சுயமரியாதையும் ஒழுக்கத்தையும் குறைக்கிறார்கள். அதனால் தான் இங்கு பேச வேண்டிய அவசியம் வந்தது. நான் இன்றும் படம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுய ஒழுக்கத்தில் என்னை விட சிறந்தவன் எவனும் இல்லை. என்னுடைய சினிமா, குடும்பம், பதவி என்று அனைத்தையும் விட என்னுடைய சுயமரியாதை தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருக்கிறார்.