இயக்குநர்கள் முதல் படத்திலேயே லாபத்தை எதிர்ப்பார்க்க கூடாது - இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆதங்கம்

By subhashini · 30/8/2025

இயக்குனர்கள் நிலைமை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார்.

சமுத்திரகனி இடம் பணியாற்றியிருந்தவர் சாம். தற்போது சாம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யோலோ. இந்த படத்தில் பூர்ணேஷ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. சகிஷ்னா தேவி இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது.

ஆர் கே செல்வமணி சொன்னது:

இந்த விழாவில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஆர் கே செல்வமணி கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் ஆர்கே செல்வமணி, இப்போது இருக்கும் சூழலில் படங்கள் எடுப்பதை விட அதை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாக இருக்கிறது. நடிகர் படவா கோபி ஏழு வருடங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனாலும், அந்த படத்தினுடைய இயக்குனர் எல்லா லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைத்தார்.

https://www.youtube.com/watch?v=UvpAKzlo9cA

இயக்குனர் நிலைமை:

இதனாலே ஏழு ஆண்டுகளாக அந்த படைப்பு வெளிவராமலேயே இருக்கிறது. அதோடு புதிதாக வரும் இயக்குனர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இயக்குனர்கள் முதல் படத்திலிருந்து லாபம் என்ற நோக்கில் யோசிக்கவோ சிந்திக்கவோ முடியாது. உங்களை நம்பி பணம் போட வரும் தயாரிப்பாளர்களை மதித்து அனுசறியுங்கள். அப்போதுதான் உங்களுடைய இரண்டாவது படத்தில் இருந்து முன்னேற்றம் தொடங்கும் என்று கூறி இருக்கிறார்.

கேப்டன் பிரபாகரன் படம்:

விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்து இருந்தார்கள். கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்னன், மன்சூர் அலிகான், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்தார்கள். இந்த படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full