பண பரிவர்த்தனை நடந்தது உண்மைதான், ஆனா - 2438 கோடி ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷின் கோரிக்கை மனு நிராகரிப்பு

By subhashini · 21/4/2023

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர் கே சுரேஷ் வைத்த கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ஆருத்ரா மோசடி வழக்கு குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. சென்னை அமைந்த கரைப்பகுதியில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் பணம் தருவதாக நிறுவனம் அறிவித்திருந்தார்கள். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருந்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அந்த நிறுவனம் திருப்பி கொடுக்கவில்லை.

அதோடு இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 2438 கோடி முதலீடாக பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்கள் பொது மக்கள். இதனை அடுத்து போலீசாரும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தனிப்படை போலீசாரும் அமைத்திருக்கிறார்கள். முதல் கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது.

ஆருத்ரா பண மோசடி வழக்கு:

இந்த நிறுவனத்தின் மேலான் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடு தப்பி தலைமறைவாகி இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆன ஹரிஷ் மற்றும் மற்றொரு இயக்குனர் மாலதி, ரூசோ ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். பின் போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியான ஆர் கே சுரேஷ் என்பவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பண மோசடி வழக்கில் ஆர் கே சுரேஷ்:

இவர்களது வாக்குமூலத்தின் பெயரில் இது வரையில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், ரூசோவிடம் விசாரணை செய்ததில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் இதில் சம்மதம் இருப்பதாக தெரியவந்தது. பின் போலீஸ் ஆர்கே சுரேஷை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அவர் சுட்ச் ஆஃப் செய்துவிட்டார் எடுக்கவில்லை. அதோடு ஆர்கே சுரேஷ் துபாய் தப்பி சென்றிருப்பது தெரிய வந்து இருக்கிறது. இதனால் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்கே சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சமன் அனுப்பிருந்தார்கள்.

ஆர் கே சுரேஷ் போட்ட மனு:

இந்த நிலையில் சம்மனை ரத்து செய்ய கோரி ஆர் கே சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், படம் தயாரிப்பது தொடர்பாகத்தான் ரூசோ என்னை அணுகினார். அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்தது. என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நான் வெளிநாட்டில் இருக்கிறேன். விசாரணைக்கு நேரடியாக ஆஜராக முடியாது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து ஆர் கே சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது. இந்த மோசடிக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

நீதிபதி போட்ட உத்தரவு:

பின் நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும் படி உத்தரவிட்ட சமனில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை. இதனால் ஆர்கே சுரேஷ் போட்ட மனு தாக்கல் ரத்து செய்யப்படுகிறது. தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படி காவல் துறைக்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விசாரணையில் ரூசோ, ஆர் கே சுரேஷ் பாஜகவில் பதவி வாங்க மோசடி செய்த பணத்தை கொடுத்து தான் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full