நான் வனிதானால போல, ஜோவிகாவுக்காக தான் படம் பண்ண போனேன் - ராபர்ட் மாஸ்டர் ஓபன் டாக்

By subhashini · 14/8/2025

வனிதா விஜயகுமார் பற்றி ராபர்ட் மாஸ்டர் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவரின் முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான். ஏற்கனவே காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர்.

ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடன இயக்குனராக கொடி கட்டி பறந்து இருந்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வராததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் ராபர்ட் மாஸ்டர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது. பின் இவர் சமீபத்தில் வெளிவந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடத்தி இருந்தார்.

ராபர்ட் மாஸ்டர் குறித்த தகவல்:

இந்த படத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக வனிதா நடித்திருந்தார். அதோடு இந்த படத்தை இவரே இயக்கி நடித்தும் இருந்தார். வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த படத்தை தயாரித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்த படத்தை தயாரித்ததாக ஜோவிகா ஏற்கனவே பேட்டியில் கூறி இருந்தார். இந்த படத்தில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண், ஆர்த்தி கணேஷ், கணேஷ், தாமு உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=EMseuq3rwbg

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம்:

இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் ட்ரோல் செய்யப்பட்டும் இருந்தது. பின் ராபர்ட் மாஸ்டரின் தாய் சில வாரங்களுக்கு முன் இறந்தது அனைவரும் அறிந்தது. தன் தாயின் இறுதி ஊர்வலத்தில் ராபர்ட் மாஸ்டர் நடமானடிய வீடியோ எல்லாம் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராபர்ட் மாஸ்டர், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்ததற்கு காரணமே ஜோவிகா தான்.

ராபர்ட் மாஸ்டர் பேட்டி:

சின்ன வயதிலிருந்தே அந்த பெண்ணுடன் ட்ராவல் பண்ணி இருக்கிறேன். அந்த பெண்ணுடைய படிப்பு செலவெல்லாம் பார்த்திருக்கிறேன். நான் வனிதாவிற்காக போகவில்லை. அந்த பொண்ணோட பணத்தை வேஸ்ட் செய்து விடுவார்கள். அந்த பொண்ணுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று தான் வந்தேன். என் வீட்டிலும் சொன்னேன். ஆனால், அது எனக்கு ரிவர்ஸ் ஆகி விட்டது. இயக்குனராக தான் என்னை கமிட் செய்தார்கள். ஆரம்பத்தில் வனிதா எதுவும் பேச மாட்டேன் என்று சொன்னார்.

https://youtube.com/shorts/x4ACPOr1EyY?si=LArhghtr_RoZE6a0

வனிதா-ஜோவிகா பற்றி சொன்னது:

வனிதாவை பற்றி தான் எல்லோருக்கும் தெரியுமே, அவரிடம் பேச முடியவில்லை. அவர் சொல்வதை தான் நாம் செய்யணும் என்று எதிர்பார்ப்பார். கடைசியில் அப்படித்தான் நடந்தது. அவர் சொல்வதை கேட்கவேண்டும் இல்லை என்றால் ஓடி வந்து விடனும். ஜோவிகா, பணம் வீணாக கூடாது என்று தான் நான் அமைதியாக இருந்தேன். ஒரு படத்தில் கமிட் ஆன உடன் பாஸ்போர்ட் தயாரிப்பாளர் இடம் தான் இருக்கும். என்னிடம் மட்டும் பாஸ்போர்ட் இருந்திருந்தால் நான் எப்போதோ வந்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full