என் பேரனை பார்க்க வரவே இல்லை, பல முறை சொல்லிட்டேன் - ஆதங்கத்தில் ரோபோ சங்கர் சொன்னது
சமுத்திரக்கனி குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.
அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் திரைப்பயணம்:
இதற்கிடையில் இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மிக மோசமாக நிலையில் இருந்தார். அதற்கு பின் சிகிச்சை அளித்து தற்போது இவர் தேறி இருக்கிறார். மீண்டும் ரோபோ சங்கர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவருடைய மகள் இந்திரஜா அவர்கள் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்திரஜாவும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
ரோபோ சங்கர் பேட்டி:
சமீபத்தில் தான் இந்திராஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இந்திராஜா சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். அதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த திரு. மாணிக்கம் படத்தினுடைய வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரோபோ சங்கர், சமுத்திரகனி எனக்கு உடன்பிறவாத சகோதரர். என்னுடைய மகள் இந்திரஜா கூட சமுத்திரகனியின் பெயரை தன்னுடைய ஃபோனில் பெரியப்பா என்று தான் சேவ் செய்து வைத்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=lMBp6bRmVw4
சமுத்திரக்கனி பற்றி சொன்னது:
அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நாங்கள் பார்க்கிறோம். ஆனால், தற்போது வரை அவர் என் பேரனை பார்க்கவே இல்லை. விரைவிலேயே அந்த நிகழ்வும் நடைபெறும் என்று நம்புகிறேன். நானும் சமுத்திரகனியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. இது தொடர்பாக நான் அவரிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக அதுவும் ஒருநாள் நடைபெறும் என்று கூறியிருக்கிறார். இப்படி ரோபோ சங்கர் கூறி இருக்கும் விஷயம்தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
சமுத்திரக்கனி குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருந்த இருந்த படம் திரு.மாணிக்கம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.