அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்பாக கோமதிக்கு பரிசளித்த ரோபோ சங்கர்.!

By ·

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா.

https://twitter.com/sunnewstamil/status/1121252880793526274

அதே போல தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இப்படி ஒரு பெருமையை சேர்த்துள்ளார்.

இவரின்  இந்தச் சாதனையை அரசியல் தலைவர்கள் முதல், சினிமா மற்றும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனது பங்காக நடிகர் ரோபோ சங்கர், தமிழக தடகள வீராங்கனை கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாகத் தருவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ரோபோ சங்கர்.

தனது தந்தை மற்றும் கோச் இறப்பிற்குப் பிறகும்,  உடல் நலம் பாதிக்கப்பட்டும் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்ற தங்க மங்கை கோமதிக்காக மிகுந்த சந்தோஷப்படுகிறேன். ஏனெனில், நானும் கஷ்டப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன்தான். கஷ்டப்படும் குடும்பத்தோட வலி என்னன்னு எனக்குத் தெரியும். அதைத் தாண்டி, இந்தச் சாதனையைச் செஞ்சதுக்கு தலைவணங்குறேன். இது பெண்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுக்கக்கூடிய விஷயம். என்னால் முடிந்த சிறிய தொகையைக் கொடுப்பதுக்கு நான் பெருமைப்படுறேன்" என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full