சாய் பல்லவியின் பிரேமம் டான்ஸ்ஸை அச்சு பிசுராமல் ஆடிய ரோபோ ஷங்கர் மகள். வீடியோ இதோ.

By Rajkumar · 11/6/2021

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்த இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருந்தார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர்.

https://twitter.com/chettyrajubhai/status/1403281640135094274

இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா. இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது . இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி இருந்தார்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விருது குறித்து இந்திரஜா கூறியது, எனக்கு இந்த விருது கிடைத்ததில் மிகவும் சந்தோசமாக உள்ளது. அதுவும் அமீர் சார் கையில் வாங்கியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறி இருந்தார். மேலும், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அதே போல இவர் டிக் டாக் மூலம் தான் பரபலமானார். அதிலும் டிக் டாக்கில் இவர் ஆடிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இவரின் டிக் டாக் வீடியோக்கள் தான் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் இவர் பிரேமம் படத்தில் சாய் பல்லவி ஆடிய நடனத்தை அச்சு பேசுறாமல் அப்படியே ஆடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full