என் அம்மா நடனம் ஆடியதற்கு இது தான் காரணம் - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இந்திரஜா
தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருந்தவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர. டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.
இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார்.
ரோபோ சங்கர் உடல்நிலை:
பின் சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் நிலை குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இதற்கிடையில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரின் மனைவி பிரியங்கா அவர்கள் நடனம் ஆடியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=jTNYIMabAwA
இந்திராஜா பேட்டி:
இப்படி இவர் நடனமாடியிருந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. பலரும் இது தொடர்பாக விவாதம் செய்திருந்தார்கள். அதில் சிலர் ரோபோ சங்கரின் மனைவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர், எந்த இடத்தில் நகைச்சுவை, சிரிப்பு இருக்கிறதோ அங்கு அப்பா நிச்சயமாக இருப்பார். அவர் விட்டு சென்ற பொறுப்புகளும் கடமைகளும் எனக்கு நிறையவே இருக்கு.
https://www.youtube.com/watch?v=CEYKGQUzUSo
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
அவர் விட்டு சென்ற பாதையில் இருந்து நாங்கள் தொடர்வோம். மக்களுடைய ஆதரவு எங்களுக்கு ரொம்பவே முக்கியம். அப்பா சாமி கிட்ட போகும்போது அம்மா தன்னுடைய காதலை நடனத்தின் மூலமாகத்தான் வெளிப்படுத்தினார்கள். எங்கள் குடும்பத்தினுடைய மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் டான்ஸ் மூலம்தான் வெளிப்படுத்துவோம். அதுதான் அவர்களுடைய காதல். அதுதான் எங்களுடைய வாழ்க்கை. அதை தவறாக புரிந்து கொண்டால் நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது. அவருடைய புரிதல் அவ்வளவு தான் என்று கூறி இருக்கிறார்.