அஜித்தை முதல் முதலில் சந்தித்த அனுபவம்.! இவ்வளவு பேசியுள்ளாரா தல.! ரோபோ ஓபன் டாக்.!

By Rajkumar · 12/1/2019

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியங்களில் ஒருவராக மாறிவிட்டார் ரோபோ. தற்போது விஸ்வாசம் படத்தில் தலயுடன் வசதியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரோபோ ஷங்கரிடம், விஸ்வாசம் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அஜித்தை சந்தித்த முதல் அனுபவம் குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது.

நான் விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தலயை பார்த்ததே இல்லை. நான் அவரை முதல் முதலில் பார்த்ததே வேட்டி கட்டு பாடலின் படப்பிடிப்பின் போது தான். அவர் கேரவேன் அருகில் தான் நான் இருந்தேன்.

அஜித்தின் கேரவனுக்கு சென்றதும் என்ன பேசுவது, கை கொடுப்பதா வேண்டாமா என ஒரே பதட்டமாக இருந்தது. ஆனால் அந்த பதட்டத்தை எல்லாம் ஒரு நொடியில் அஜித் உடைத்து விட்டார். என்னை பார்த்ததும் ரோபோ ஷங்கர் எப்படி இருக்கீங்க சார். குடும்பத்தில் அனைவரும் எப்படி இருக்காங்க என கேட்டுவிட்டு, உங்க கிட்ட ஒர்க் பண்றது மிகவும் சந்தோசம். வாங்க போகலாம் சாங் ஷூட்டிங்கிற்கு என என்னையும் அழைத்து சென்றார். அதே போல அவர் தூங்கவே மாட்டார் அவர் அனைவரிடமும் கலகலவேண பேசிகொண்டே தான் இருந்தார்.

கமலுக்கு பின் நான் கடவுளாக நினைப்பது அவர் தான். என்னுடைய அயிசை கூட அவருக்கு கொடுத்து விட வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. மேலும், அவர் ரசிகர்கள் செய்யும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நான் நடிக்கிறேன் ஆடுகிறேன் என்றால் அது ரசிகர்களால் தான். கண்டிப்பாக அவர்களுக்காக நான் கண்டிப்பா ஏதாவது பண்ணனும் என்று அஜித் சார் கூறியிருந்தார் என்று ரோபோ ஷங்கர் மிக நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full