கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த வாரம் வியாழனன்று மாலை மூன்று மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

Advertisement

இதில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர், சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த இரண்டு வீரர்களுக்கும் நடிகர் ரோபோ ஷங்கர் தலா ஒரு லட்சம் நிதியுதவி செய்தார்.

உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவி அறிவித்து வீடியோ வெளியிட்டதோடு தற்போது அந்த இரண்டு குடும்பத்தையும் நேரில் சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், சொன்னபடி இருவர் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் அளித்துள்ளார். பெரிய நடிகர்கள் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்காத நிலையில் ரோபோ சங்கர் செய்துள்ள இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Advertisement
Advertisement