ஹோம் டூர் வீடியோவால் ஏற்பட்ட சோகம், செல்லப்பிராணிகளை பறிமுதல் செய்த வனத்துறை - ரோபோ சங்கர் மனைவி விளக்கம்.

By Manikandan · 16/2/2023

ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறி முகமானர் அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார். பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். ரோபோ ஷங்கர் தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தான் ரோபோ சங்கர் வீட்டில் உள்ள கிளிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு தேசிய பூங்காவில் ஒப்படைத்திருக்கும் சம்பவம் குறித்து ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா பிரபல ஊடகம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்க்கு பதிலளித்த ரோபோ சங்கர் "இந்த கிளிகளை நாங்கள் பல காலமாக வளர்த்து வருகிறோம் ஒருநாள் இரண்டு நாள் கிடையாது மூன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். நாங்கள் இதனை வனத்துறையிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.

எப்படி கிளிகள் கிடைத்தன :

இந்த கிளிகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை இது என்னுடைய தோழி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார் அவர் பரிசாக கொடுத்துதான் அது. எங்களுக்கும் கிளிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் தான் அவற்றிற்கு பிகில், ஏஞ்சல் என்று பெயர் வைத்து வளர்த்தோம், அவையும் எங்களை அக்கா, அம்மா என்றுதான் பேசும். குறிப்பாக என்னுடைய கணவரை ரோபோ சங்கர் என்று தான் கூறும்.

அனுமதி பெறாததற்க்கு காரணம் :

கடந்த மூன்றறை ஆண்டுகள் இந்த கிளிகளை எங்ககளின் குழந்தைகள் போன்று தான் வளர்த்து வந்தோம். பரிசாக கிடைத்த கிளி என்பதினால் நாங்கள் அனுமதி பெறவில்லை, அதே போலத்தான் நாங்கள் வனத்துறையிடமும் சொல்லவில்லை. தற்போது நாங்கள் இலங்கையில் உள்ளோம் வீட்டிற்கு. நாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து கிளிகளை எடுத்து சென்றிருக்கின்றனர். நாங்கள் ஊருக்கு வந்ததும் இதை பற்றி விளக்கமளிக்கவுள்ளோம் என்று கூறினார் பிரியங்கா.

எப்படி வெளியில் தெரிந்தது :

கிளிகளை வளர்த்து வருவது எப்பிடி தெரிந்தது என்று தெரியவில்லை, சமீபத்தில் தனியார் ஊடகங்கம் ஹோம் டூர் மற்றும் குக்கிங் வீடியோ எடுத்தார்கள் அதில் கிளிகள் இருந்தன ஒரு வேளை அதனால் தெரிந்திருக்கலாம். கிளிகளை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு இருந்தால் நாங்கள் ஏன் வீடியோவில் கிளிகளை காட்ட போகிறோம். பிகிலும் ஏஞ்சலும் இல்லாதது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் வனத்துறையினர் அவர்களது வேலையை தான் செய்திருக்கின்றனர்.

நடிகர் என்பதை வைரலாகிவிட்டது :

இந்த விஷியங்ககள் எல்லா இடங்களிலும் நடப்பதுதான். சினிமா நட்சத்திரத்தின் வீடு என்பதினால் இந்த விஷயம் வைரலாகி விட்டது. இந்த விஷியத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினார். மேலும் வீட்டில் மூன்று குட்டிகளை வளர்ப்பதாகவும், அவற்றை நாய், கிளி என்று கூப்பிடாமல் குழந்தைகளை போலத்தான் பார்த்து வந்தோம், அவை இப்போது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full