இனி அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சது என்று சொன்னார்கள் - ரோபோ சங்கர் உருக்கம்

By subhashini · 9/5/2025

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.
அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின் விஜய் டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார். இதற்கிடையில் இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மிக மோசமாக நிலையில் இருந்தார். அதற்கு பின் சிகிச்சை எடுத்து தேறி மீண்டும் ரோபோ சங்கர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரோபோ சங்கர் திரைப்பயணம்:

தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவருடைய மகள் இந்திரஜா அவர்கள் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்திரஜாவும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்திராஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இந்திராஜா சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். அதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் அம்பி. இந்த படத்தை பாஸ்ஸர் ஜே எல்வின் என்பவர் இயக்கி இருக்கிறார்.

ஹீரோவான ரோபோ சங்கர்:

இந்த படத்தில் ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது இதில் கலந்துகொண்ட ரோபோ சங்கர், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இரண்டு வருடம் நான் மஞ்சகாமாலை நோயால் ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருந்தேன். அந்த சமயத்தில் 10 நிமிடம் வெயிலில் இருக்க முடியாது.

https://www.youtube.com/watch?v=wywpfO9j5bY

விமர்சனங்கள் பற்றி சொன்னது:

சரியான நேரத்திற்கு நான் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட மூன்று வருடம் அந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பத்திய சாப்பாடு தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் வீட்டிலிருந்தே சாப்பாடு கொண்டு வந்து விடுவேன். என்னை கல்யாணம் செய்ததில் இருந்து இப்போது வரை நன்றாக என்னுடைய மனைவிதான் பார்த்துக் கொள்கிறார். ரோபோ சங்கர் அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது என்றெல்லாம் சினிமா வட்டத்தில் பலருமே சொல்லியிருந்தார்கள். இது என் காது படவே நான் கேட்டிருக்கிறேன். ஆனால், மீண்டும் என்னை களம் இறக்கிய என்னுடைய மனைவிக்கும், மகளுக்கும் நன்றி.

https://www.youtube.com/watch?v=xV0U4TOVAF8

தனுஷ் பற்றி சொன்னது:

மேலும், சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போகும்போது ஒரு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும். மாரி படத்தில் அந்த ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றால் என்னால் வெள்ளித்திரையில் நிலைத்து இருக்க முடியாது. இந்த படத்திற்கு முன்பு ரோபோ சங்கர், ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வந்து நடித்துக் கொடுங்கள் என்பார்கள். நமக்கான தனித்துவத்தை காண்பிக்க முடியவில்லை என்று நான் நிறைய முறை வருத்தப்பட்டேன். ஆனால், மாரி படத்தில் தான் எனக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் சார் என் வாழ்க்கையில் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அவர் செய்த உதவியை மறந்தேன் என்றால் எனக்கு சாப்பாடு கூட கிடைக்காது. அவர் இக்கட்டான சூழலில் எனக்கு உதவி செய்திருக்கிறார். இன்றைக்கு நான் சந்தோசமாக இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவருக்கும் என்னுடைய நன்றிகள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full