தனது மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக கரி விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர்.தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா.

Advertisement

ரோபோ ஷங்கர் மகள்:

இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்திரஜா திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலரும், அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள்.

Advertisement

திருமண நிச்சயதார்த்த நிகழ்வு:

அதற்கு இந்திரஜா, ஆமாம், திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறியிருக்கிறார். இவர் திருமணம் செய்யும் நபர் கார்த்திக். இவர் மதுரை சேர்ந்தவர். தொடர்வோம் என்ற அமைப்பின் நிறுவனர். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

தடபுடல் திருமணம் :

தில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் ரோபோ கலந்து கொண்டிருக்கிறார்கள்.இதை அடுத்து ஒரு வாரத்திற்கு முன்பே இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. இந்திரஜா- கார்த்திக் திருமணம் மதுரையில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். திருமண வரவேற்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஊருக்கே கரி விருந்து :

இந்த நிலையில் மதுரையில் தனது மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக கரி விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். மாப்பிள்ளை பெண்ணுக்கு மட்டுமல்லாது ஊருக்கே கிடா விருந்து வைத்து அசத்தி இருக்குறார். இந்தவிருந்தில் மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை, மட்டன் சுக்கா, மீன் ப்ரை, சிக்கன் 65, குடல், கோலா உருண்டை, சிக்கன் குழம்பு, ஈரல் வறுவல் என வகைவகையாக ஐட்டங்களை வைத்து அசத்தி இருக்கிறார். ரோபோ ஷங்கர் வைத்த விருந்தை பார்த்து ஊரே அசந்து போனது. 

Advertisement