இல்ல இது ரோபோ ஷங்கர் இல்ல, விஜய் டிவி நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கரை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

By Manikandan · 2/5/2023

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தொலைக்காட்சியில் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார்.

ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது ரோபோ சங்கர் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார்.

சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியாகியிருந்த இரவின் நிழல் படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜன்ட் படத்திலும் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களின் காமெடியனாக ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ரோபோ ஷங்கர் சமீப காலமாக உடல் எடை குறைந்து வருகிறார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் ''ரோபோ ஷங்கர் படத்துக்காக சமீபத்தில் எடை குறைந்தார். ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றபோது அவருக்கு லேசான மஞ்சள் காமாலை இருந்தது. இதனால் அவர் பார்ப்பதற்கு டயர்டாக இருப்பதுபோல் இருக்கிறது. மற்றபடி அவருக்கு உடல் நலக்குறைவு எல்லாம் இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்று கூறி இருந்தார்.

உடல் எடை குறைந்ததிலிருந்து ரோபோ சங்கர் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளும் பங்கு வரவில்லை. இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர் சமீபத்தில் வந்திருந்தா.ர் இது தொடர்பான ப்ரோமோ ஒன்றும் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த வீடியோவில் ரோபோ ஷங்கரை கண்ட ரசிகர்கள் பலரும் இது ரோபோ சங்கரே இல்லை என்ற அளவு அவரது உடலை பார்த்து ஷாக் அடைந்து இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full