இன்று வெளியாக உள்ளதா "விஸ்வாசம் " படத்தின் அப்டேட் ..!ரோபோ ஷங்கர் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..!

By Rajkumar · 23/10/2018
விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் டீஸர் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ளது. ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டும் "விஸ்வாசம்" படத்தின் எந்த ஒரு அப்டேட் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லாமல் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இந்த படத்தில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் நடித்திருப்பது ஏற்கனவே அறிந்த விடயம் தான். மேலும், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடிகர் ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். ரோபோ ஷங்கரின் இந்த பதிவை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் "விஸ்வாசம்" படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்ப்பது இருந்தனர். ஆனால், இன்று அந்த செய்திக்கும் மிக பெரிய ஏமாற்றம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், சத்யா ஜோதி பிளம்ஸ்ஸிடம் நான் உரையாடினேன். படத்தின் அப்டேட் இன்று வெளியாகாது என்று உறுதிபடுத்தி விட்டனர். இன்று வெளியாவதாக இருந்த படத்தின் தகவல் வேறு ஒரு நாளில் அறிவிக்கப்படும். என்று பதிவிட்டுள்ளார். எனவே, விஸ்வாசம் படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி இருந்த அஜித் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.ஆனால், அடுத்த மாதம் நவம்பரில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படபடிப்புகள் நடைபெற உள்ளது படத்தின் படபிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது என்பது தான் இப்போதைக்கு அஜித் ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலான அப்டேட்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full