அப்துல் கலாமின் டைம் ட்ராவல் 'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் வொர்க் அவுட் ஆனதா ?இல்லையா? - முழு விமர்சனம் இதோ

By Rajkumar · 18/10/2024

இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்த சங்கர் இயக்கத்தில், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, விஷ்வத், ஜெகன் ராமச்சந்திரன் துரைராஜ் உட்பட பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் தான் 'ராக்கெட் டிரைவர்'. இப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை என்பது, 1948 இல் இருந்து அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்து கொண்டு நிகழ் காலத்திற்கு வருகின்றார் என்றால், என்னவெல்லாம் நடக்கின்றது என்ற பேண்டஸி கதைதான். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா? இல்லையா ? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்:

அறிவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் விஷ்வத். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டுகிறார். ஒரு நாள் அவரது ஆட்டோவில் இளம் வயது அப்துல் கலாம் (நாகா விஷால்) வழி கேட்டு உதவி கேட்கிறார். ஆட்டோ பயணத்தில் 1984 இல் இருந்து அப்துல் கலாம் 2023க்கு டைம் டிராவல் ஆகி வந்திருப்பது தெரிய வருகிறது. எதற்காக 25 வருடங்களுக்குப் பிறகு வரவேண்டும். அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என ஆட்டோ ஓட்டுநரும், அப்துல் கலாமும் ஒரு புரிதலுக்கு வருகிறார்கள். பின்னர் இருவரும் அதற்கான காரணத்தை தேடி ராமேஸ்வரம் போகிறார்கள். கலாமின் காலப் பயணத்திற்கான காரணத்தை தெரிந்து கொண்டார்களா இல்லையா என்பது தான் மீதிக் கதை.

இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்ட படிப்பாளி விஸ்வத். ஆனால், அதை தொடர முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு எப்போதும் இருக்கிறது. தன்னை படிப்பதற்கு விடாமல் தடுத்த தனது அப்பா மீது கோபத்தில் இருப்பவர். அதுபோல் இருக்கும் ஒருவருக்கு இளம் வயது அப்துல் கலாம் வந்து வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைக்கிறார். படத்தில் ஆட்டோ டிரைவர் ஆகவும், அறிவியல் ஆர்வலராகவும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் விஷ்வத்.

கதையில் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பவர் இளம் வயது அப்துல் கலாம் நாகா விஷால். இவர் 2019ல் வெளிவந்த 'கே.டி என்கிறது கரும்புத்துரை' படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர். இவர் தன் நடிப்பின் மூலம் அந்த காலத்தில் இளம்வயதில் அப்துல் கலாம் இப்படித்தான் இருப்பாரோ என்று நம்மை என்ன வைக்கிறார் நாகா விஷால்.

சிறு வயதில் அப்துல் கலாமின் நண்பராக காத்தாடி ராமமூர்த்தி நடித்திருக்கிறார். தற்போது நாகாவும், ராமமூர்த்தியும் ஒருவரை ஒருவர் வாடா போடா என அழைத்துப் பேசிக் கொள்வது சுவாரசியமாக இருக்கிறது. சுனைனா கதாபாத்திரம் படத்திலிருந்து எதற்காக இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு பயண கதையில் கதாபாத்திரங்களோடு சேர்ந்து பயணத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தெஜிமெல் சூர்யா தாமஸ்‌. இசையமைப்பாளர் கௌஷிக் கிருஷ் படத்திற்கு தன் இசைமூலம் பலம் சேர்க்கிறார்.

மொத்தத்தில் படம், ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு, அதில் முடிந்த அளவிற்கு சுவாரசியப்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே சில குறைபாடுகள் இருக்கத்தான் இருக்கிறது. அந்தத் தோய்வு இல்லாமல் இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தப் படம் பார்ப்பதற்கு ஒரு ஷார்ட் பிலிம்மை பெரிய திரையில் பார்ப்பது போல் ஒரு எண்ணத்தை நமக்கு உண்டாக்குகிறது. படத்தின் ஆரம்ப சில காட்சிகள் இலக்கமில்லாமல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் ,அப்துல் கலாம் வந்த பிறகு கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ஒரு மாறுபட்ட படமாக ராக்கெட் டிரைவர் வந்திருக்கும்.

நிறை:

சிறிய வயது அப்துல் கலாம் வரும் காட்சிகள்.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை பலம் சேர்க்கிறது

வித்தியாசமான கதை

குறை:

முதல் பாதி தோய்வு

சுவாரஸ்யம் கம்மி.

பெரிதாக குறை சொல்லும் அளவுக்கு படத்தில் எந்த குறையும் இல்லை.

மொத்தத்தில் ராக்கெட் டிரைவர் படம் - எரிபொருள் கம்மி

behindtalkies AMP · Quick view
View full