சென்னை ரோகினி திரையரங்கில் டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் குடும்பத்திற்கு டிக்கெட் இருந்தும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நேற்றிலிருந்து சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து அந்த விடியோவை எடுத்த நபர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம்நேற்று வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி,  மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படத்தை காண முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் கூடி கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காண ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நரிக்குறவர் பெண் ஒருவர் டிக்கெட் இருந்தும் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு அவரை ஊழியர் அசிங்கமாக திட்டியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

Advertisement

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாத பல்வேறு பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் தான் இந்த விஷயம் குறித்து அந்த வீடியோவை வெளியிட்ட நபர் பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது “அவர்கள் டிக்கெட் வைத்திருந்தார்கள் ஆனால் அந்த தியேட்டரின் டிக்கெட் கலெக்டர் அவர்களை அடிக்க வந்தார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு நான் அவர்களை அழைத்து டிக்கெட் கலெக்டரிடம் சென்று ஏன் இவர்களை தியேட்டருக்குள் விட வில்லை என்று கேட்டேன்.

Advertisement

அப்போதுதான் விடியோவும் எடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. பின்னர் வீடியோவை நிறுத்திவிட்டு கேட்ட போது இவர்கள் உள்ளே சென்று மற்றவர்களிடம் காசு கேட்ப்பார்கள் என்று கூறினார். இவர்கள் உள்ளே சென்று அப்படி கேட்டால் நீ பொறுப்பு ஏற்றுக்கொள்கிறாயா? என கேட்டார்கள். அதற்கு பிறகு தான் மற்ற மீடியாக்களின் உதவியுடன் வந்து கேட்டபோது அவர்களை திரையரங்கிற்கு உள்ளே விட்டார்கள்.

Advertisement

இது தீண்டாமை காரணமாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களின் உடைகள் அவர்கள் யார் என்று காட்டியதால் உள்ளே விடவில்லை. உண்மையில் அவர்களை திரையரங்கத்திற்குள் விடாதது பணம் கிடையாது, அதற்கு கரணம் அவர்களின் ஜாதியும், அவர்களின் உடையும் தான் காரணம். இது மாற வேண்டும் அதற்கு அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையான மன்னிப்பு கேட்காத திரையரங்க உரிமையாளரின் மீது கண்டனத்தையும் வைத்தார் அந்த நபர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement