ஊழல், கமிஷன் - ஆந்திராவில் ரோஜாவிற்கு எதிராக சொந்தக் கட்சியினரே போர்க்கொடி.

By Arun · 5/5/2024

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சி பிடி நடன கலைஞராக தான் இருந்தார். பின் 1991 ஆம் ஆண்டு பிரேம தப்பாஸு என்ற தெலுங்கு ஆண்டு மூலம் தான் இவர் நடிகையானார். அதற்கு பின் தான் இவர் தமிழில் செம்பருத்தி படத்தில் நடித்திருந்தார். இவர் முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற என் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல படங்களில் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

ரோஜா திரைப்பயணம்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு நகரி காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு.

மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி வேலை செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் ஏ வாக பல உதவிகள் செய்து இருந்தார். அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா.

ரோஜா அரசியல்:

தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகையும், அமைச்சரும் ஆன ரோஜா மீது அவருடைய கட்சி நிர்வாகிகள் கொடுத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அமைச்சர் ரோஜா அவர்கள் தன்னுடைய நகரி தொகுதியில் நிறைய ஊழல் செய்வதாகவும், திட்டங்களுக்கு 10% லஞ்சம் வாங்குவதாக அவருடைய தொகுதி கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

ரோஜா கட்சி விவகாரம்:

இது தொடர்பாக முதலமைச்சரிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்
ரெண்டு ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள், 6 பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட இன்னும் பல நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் கூடிய விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் தன்னுடைய கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலக இருப்பது ரோஜாவிற்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full