அப்பாவிற்கு விபத்து, ஒரு வேலை சாப்பாடு, ஒரே ரூமில் 4 பேர். ரோஜா சீரியல் நடிகை வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.

By Rajkumar · 5/10/2020

தெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'அந்தாரி பந்துவையா'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஷர்வானந்த் நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக பத்ம ப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இது தான் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படம்.

வீடியோவில் 12 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=K4Q0dfSv7RQ&t=589s

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் 'நா சாமி ரங்கா', ராமின் ' ஹைப்பர்', ராணா டகுபதியின் 'நேனே ராஜு நேனே மந்திரி' என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான 'மேகமாலா' மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான 'ஸ்ரவனா சமீராலு' ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி.

2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் 'காஞ்சனா 3'. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இதில் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ரோஜா சீரியல் தான். இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா, தனது சிறு வயதில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full