துணிக்கடையை சார்த்த டைட்டில். அர்ஜுன் சாரின் அடுத்த சீரியல் எந்த சேனல்? ஹீரோயின் யார் தெரியுமா?

By Rajkumar · 29/1/2024

ரோஜா சீரியல் நடிகர் சுபு சூர்யன் நடிக்க இருக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதவரை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் ரோஜா. இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்தது. மேலும், இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தவர் சிபு சூரியன்.

இதில் நாயகியாக ப்ரியங்கா நல்காரி நடித்து இருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் தான் சிபு சூரியன் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடாவிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் நாடகங்களில் முறையாக சேர்ந்து கற்று கொண்டார்.

சிபு சூரியன் குறித்த தகவல்:

பின் இவர் 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் தான் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தமிழில் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சந்திரலேகா, லட்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக, அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பாரதிகண்ணம்மா 2 சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார்.

சிபு சூரியன் நடிக்கும் புது சீரியல்:

இந்த சீரியலின் மூலமும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் சிபு சூரியன் நடிக்க இருக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் தான் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலின் பெயர் சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ். இந்த சீரியலில் தான் கதாநாயகனாக சிபு சூரியன் கமிட்டாகி இருக்கிறார்.

வைஷ்ணவி குறித்த தகவல்:

இதில் இவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை வைஷ்ணவி நடிக்க இருக்கிறார். இவர் முதன்முதலாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருந்த மலர் என்ற சீரியலில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு சன் டிவியில் வெளியான அழகு என்ற சீரியல் நடித்திருந்தார். பின் பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் நடித்தார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்திருந்தார்.

வைஷ்ணவி-சிபு சூரியன்:

அதற்குப் பிறகு ஜீ தமிழில் சமீபத்தில் முடிவடைந்த பேரன்பு சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது சிபு சூரியன்- வைஷ்ணவி இருவரும் இணைந்து ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார்கள். இந்த சீரியல் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.தற்போது இந்த சீரியல் குறித்த அப்டேட்டுகள் தான் வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full