காதலித்து நிச்சயமுமும் முடித்துவிட்டு விட்டு சென்ற சீரியல் நடிகர் - 5 ஆண்டு கழித்து திருமணம் முடித்த ரோஜா சீரியல் நடிகை.

By Arun · 23/3/2023

விநாயகர் கோவிலில் மிகவும் எளிமையாக தனது திருமணத்தை முடித்து இருக்கிறார் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி. சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்து சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நாயகியாக நடித்த வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா", என்று செம ஃபீலிங் காதலனை நினைத்துஒரு உருக்கமான பதிவை போட்டிருந்தார். இதுகுறித்து இணையங்களில் பலவிதமான கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில் நடிகை பிரியங்காவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் கூட முடிந்தது.

பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை கடந்த சில காலமாக காதலித்து வந்தார். மேலும், இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது . இதுகுறித்து பேசி இருந்த பிரியங்கா, எங்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால், ஒரு சில காரணங்களால் கல்யாண தேதி தள்ளிக்கொண்டே போனது மேலும், எங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரிதாகி விட்டது.

ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்ற ராகுல், என்னை இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. கடைசி முயற்சியாக மிகவும் கஷ்டப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பயனும் இல்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிருச்சு இனிமேல் அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல வேண்டியதுதான்.

ஆல் தி பெஸ்ட் ராகுல்' என்று கூறி இருந்தார் பிரியங்கா. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி போன்றவை பேசிய பிரியங்கா தெலுங்கு சினிமாவிலும், சில டிவி தொடர்களிலும் முன்பு நடித்திருந்தார் ராகுல். அவரை பிரியங்கா காதலித்து வந்தார். இருவரும் ஒரே துறையில் பிஸியாக இருந்ததால் ராகுல் இந்தத் துறை வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு மலேசியாவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். 

View this post on Instagram

A post shared by Priyanka Nalkari Official (@nalkarpriyanka)

மேலும், ப்ரியங்காவிடம் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்டது. இதற்கு விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கும் ராகுலுக்கு விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full