தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். கடந்த ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வெங்கட்பிரபு அவர்கள் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவல் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

தளபதி 68 படம்:

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு கலந்து கொண்டிருந்தார். அதில் youtube மூலம் பிரபலமாகிய பல பேர் படங்களுக்கு நடிக்க வருகிறார்கள். அதிலும் ஆபாசமாக பேசுவார்களுக்கு தற்போது நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. சினிமாவில் நடிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எப்படி நீங்கள் அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு வெங்கட் பிரபு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு முயற்சியுடன் அவர்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டு அதற்கு ஏற்ற முறையில் பயிற்சி செய்து சினிமாவில் நடிக்க வந்தால் மட்டும் தான் அவர்களால் நிலையான இடத்தை பிடிக்க முடியும்.

வெங்கட் பிரபு கொடுத்த பதிலடி:

அதை விட்டுவிட்டு நீங்கள் சொல்லும் youtubeபில் ஏதோ பொழுது போக்குக்காக எதையாவது வீடியோ மூலமாக காட்டி பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் உள்ளே வந்தவர்கள். அவர்களுக்கு தேவை பணம் தான் தவிர சினிமாவில் எந்தவித அபிப்பிராயம் இருக்காது.அப்படி வந்தவர்களுக்கு நடிப்பு என்றால் என்ன என்று கூட தெரியாது. ஏதோ அவங்க பண்ணுகிற வீடியோவுக்கு லைக் கிடைக்கிறது, காசு வருது என்று அதை செய்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள் என்று கூறுகிறார்.

Advertisement

டிக் டாக்கர்கள் குறித்து வெங்கட் பிரபு :

உடனே அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், நீங்கள் ஜி பி முத்துவை தான் சொல்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு வெங்கட் பிரபு, அவரெல்லாம் நடிகனே கிடையாது. சினிமாவில் உள்ளவர்களோடு சேர்த்து வைத்து பேசாதீர்கள். அத்துடன் சினிமாவில் இருக்கும் நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை தயவு செய்து விட்டு விடுங்கள். சினிமாவில் நடிப்பவர்கள் வேறு, சோசியல் மீடியாவை கையில் எடுத்துக்கொண்டு பிரபலமாவது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

சூர்யா கண்டனம் :

இதனால் ஜி பி முத்து ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிக் டாக் செய்பவர்கள் எல்லாம் என்ன அவ்ளோ இளக்காரமா, எப்படி கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவிற்கு வருகிறார்கள் அது போல தான் டிக் டாக்கும். வெங்கட் பிரபு சொன்ன இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement