அந்த ஒரு விஷயத்தால் தான் சின்ன வருத்தம் - தன் மகன் திருமணம் பற்றி ஆர்.எஸ்.முருகன் சொன்னது
கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் டாக் ஆப் டவுனாக இருப்பது வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம் தான். தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளர், நடிகராக இருப்பவர் வேல ராமமூர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியிருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் குணச்சித்திர நடிகர் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் கலக்கி கொண்டு வருகிறார். அதேபோல் இவர் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வேலராமமூர்த்தி பேத்திக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ் முருகன். இவருடைய மகனுக்கும், பிரபல நடிகர் வேலராமமூர்த்தி பேத்தி வைஷ்ணவி ஆகியோருக்கும் தான் நெல்லையில் திருமணம் நடைபெற்று இருந்தது. இவர்கள் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இருந்தும் இந்த பிரம்மாண்ட திருமணத்தை பற்றி தான் அதிகமாக பேசுகிறார்கள்.
வேலராமமூர்த்தி பேத்தி திருமணம்:
குறிப்பாக, மணமக்கள் மாலை முழுவதுமே தங்கப் பூவால் செய்யப்பட்டு இருந்தது. இதுதான் பலரையுமே ஆச்சரியப்படுத்தி இருந்தது. அதேபோல் மணமகள் தன்னுடைய தலையில் தங்கத்தால் ஆன முல்லை பூவை சூடி இருந்தார். அவர் அணிந்திருந்த அனைத்து நகைகளும் முழுக்க முழுக்க தங்கத்தினால் ஆனது. மணமகள் வைஷ்ணவி திருமணத்தின்போது கட்டிருந்த புடவையின் மதிப்பு மட்டுமே சுமார் 8 லட்சம் என்றும், அதற்கு அவரின் மேட்சிங் ஜாக்கெட் மட்டும் 3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. திருமணத்தில் மணமகளுக்கு கிட்டத்தட்ட 600 சவரன் நகை சீராக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமணம் குறித்த தகவல்:
பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு திருமண மண்டபத்தையே செட்டாக அமைத்து திருமணத்தை நடத்தி இருந்தார்கள். அதே போல இந்த திருமணத்தில் பல்வேறு கிராமிய கலைகளும் நடத்தப்பட்டிருந்தது. இதில் பாடகர்கள் எஸ்பி சரண், சைந்தவி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் என பலர் பாடி இருந்தார்கள். சுமார் 25,000 பேருக்கு மேல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கேட்டரிங் வேற யாரும் இல்லை மாதம்பட்டி ரங்கராஜ் தான். இந்த திருமணத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஆர்.எஸ் முருகன் இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=gke3ZETVu8k
ஆர்.எஸ் முருகன் பேட்டி:
இந்நிலையில் இந்த திருமணம் தொடர்பாக மாப்பிள்ளை அப்பா ஆர்.எஸ் முருகன் பேட்டியில், எனக்கு இரண்டு பையன். இது முதல் பையனுடைய கல்யாணம். எங்கள் குடும்பத்தில் நடக்கிற முதல் விசேஷம். திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் ஜாதி, மதம் இருக்கிறவர்கள், இல்லாதவர்கள் என ஒரு வித்தியாசமும் பார்க்காமல் எல்லார் வீட்டு விசேஷத்திற்கும் எங்க வீட்டில் இருந்து ஆள் போய்விடுவார்கள். அதனால் நம்ம வீட்டு விசேஷத்திலும் எல்லாரையும் அழைத்து செய்யணும் என்று தான் ஆசைப்பட்டோம். மரியாதை கௌரவத்தில் பொண்ணு வீட்டுக்காரர்களும் பெரிய ஆளு. அவர்களுக்கும் இதில் சம்மதம் என்பதால் தான் நினைத்த மாதிரி செய்தோம்.
வருத்தமான விஷயம்:
அதனால் கொஞ்சம் பிரம்மாண்டமாகிவிட்டது. கல்யாணத்துக்கு 15,000 பேர் வரலாம் என்று தான் எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாக 25,000 பேர் வந்தார்கள். ஆனாலும், சமாளித்து விட்டோம். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு சமூக ஊடகங்களில் வந்த சில தகவல்கள் தான் மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. மணமகளுக்கு 600 சவரன் வரதட்சணை போட்டார்கள் என்று அவர்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ சொன்னார்கள். கல்யாணம் என்றால் பொண்ணு வீட்டில் அவர்களுக்கு விருப்பப்பட்ட நகை ஏதாவது போட்டா அதையெல்லாம் கணக்கெடுத்து சொல்வதா? அதை பெரிய விவாதமாகவே செய்கிறார்கள். கல்யாணத்துக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எதிர்கட்சித் தலைவர்கள், என்னுடைய நண்பர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரி என்று எல்லோருமே வந்திருந்தார்கள். மொத்தத்தில் திருநெல்வேலியில் திரும்பி பார்த்த ஒரு திருமணம் ஆக இது இருந்தது. நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.