Rugged Boy ஆ? Chocolate Boy ஆ? - இணையத்தில் வைரலாக கலக்கலான மீம்ஸ்.

By Arun · 11/8/2022

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான ஷோதான் தமிழா தமிழா. இந்த ஷோவில் பட்டிமன்ற சாயலில் இரு தரப்பினரை அமர வைத்து அந்த இரு தரப்பினரையும் கேள்விகள் கேட்டு அவர்களது நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். உதாரணமாக பேய் இருக்கு என்று நம்புபவர்களை ஒரு தரப்பிலும், பேய் இல்லை என்று சொல்பவர்களையும் ஒரு தரப்பில் அமர வைத்து நீங்கள் பேய் இருக்கிறது என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள், நீங்கள் பேய் இல்லை என்பதை எதை வைத்து சொல்லுகிறீர்கள் என்று நடுவராக நிற்பவர் அவர்களிடம் கேள்வி கேட்டு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொடுப்பார். இந்த ஷோ தற்சமயங்களில் அனைத்துவித ரசிகர்களையும் கவர்ந்த ஒரு ஷோவாக உள்ளது.

https://twitter.com/mrharichandrar1/status/1557677231211573248

இந்த ஷோ எந்த அளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கு என்றால் வாரா வாரம் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த ஷோ. இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா என்ற ரியாலிட்டி ஷோவும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்த ஷோவில் தோன்றும் நபர்கள் பேசும் வசனங்கள் பாடல்கள் மூலமாக திடீர் திடீரென செலிபிரிட்டி ஆகி விடுவார்கள்.

உங்களை ஒரே நாளில் பிரபலமாக்கும் ஷோ :-

இதேபோல் தனித்தன்மையாக பேசுபவர்கள், கிரிஞ்சாக பேசுபவர்கள், காமெடியாக பேசுபவர்கள் என அனைவரும் வீடியோக்களும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தனியாக எடுத்து இன்ஸ்டாகிராம் பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் மீம்ஸாக அல்லது மீம்ஸ் வீடியோக்களாக சிதறவிடுவார்கள். இதை பார்ப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளங்கள் உண்டு.அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் சாக்லேட் பாய்ஸ் வெர்சஸ் முரட்டுத்தனமான பாய்ஸ் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒன்று நடத்தினார்கள்.

சாக்லேட் பாய்ஸ் வெர்சஸ் முரட்டுத்தனமான பாய்ஸ் :-

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட நாட்களில் இந்த சாக்லேட் பாய்ஸ் வெர்சஸ் முரட்டுத்தனமான பாய்ஸ் வீடியோஸ் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்தது. இப்பொழுது மறுபடியும் இரண்டு தினங்களாக அந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி உள்ளது மறுபடியும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இரண்டு குழுவினராகப் பிரிந்து சாக்லேட் பாய்ஸ்க்கு ஒரு தரப்பினரும் முரட்டுத்தனமான பாய்ஸ்க்கு ஒரு தரப்பினரும் மீம் கிரியேட் செய்து யார் பெரியவர்கள் என்பது போல போட்டி போட்டுக் கொண்டு மீமஸ்களை சிதற விடுகின்றனர்.

அந்த வீடியோவில் இருப்பது :-

அந்த வீடியோவில் ஒரு பெண் இப்போது தான் காதலிக்கும் ஒரு ஆணுடன் வெளியே செல்லும் பொழுது மற்றொரு ஆண் என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால் சாக்லேட் பாய்ஸ் என்பவர்கள் நமக்கு எதுக்கு வம்பு, தேவையில்லாத வேலை, வா இங்கிருந்து சென்றுவிடலாம் என்று வேகமாக அழைத்துச் சென்று விடுவார்கள். முரட்டுத்தனமான பாய்ஸ் என்பவர்கள் அவர்களுடன் வெளியே செல்லும் பொழுது வேறொரு ஆண் தவறான கண்ணோட்டத்தில் என்னை பார்க்கிறான் என்றால் சற்றும் யோசிக்காமல் அந்த ஆணிடம் போய் என்னடா உனக்கு என்ன வேண்டும் ? ஏன் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று மிரட்டும் தோனியில் பேசுவார்கள் என்று அந்த பெண் விளக்கம் கொடுத்து இருப்பார்.

ஷோ முடிந்து பல மாதம் கழித்து சமூகவலைதளங்களில் நடக்கும் ஷோ :-

இப்பொழுது இதில் என்ன பிரச்சனை என்றால் சாக்லேட் பாய்ஸ் என்று அந்த பெண் கூறுவதைப் போல் சாக்லேட் பாய்ஸ் என்பவர்கள் அனைவரின் நல்லதுக்காக சிந்தித்து செயல்படுகிறோம் என்றும். முரட்டுத்தனமான பாய்ஸ் என்பவர்கள் உங்களைப் போல் எங்களால் போக முடியாது என்று இவர்கள் இருதரப்பிலும் அந்த நிகழ்ச்சியும் தாண்டி சமூக வலைதளங்களில் இப்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் தொகுப்பாளராக மீம்ஸ் கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். தொகுப்பாளராக இருந்து மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்யும் மீம்ஸ்களை ஷேர் செய்து ஸ்டோரிகளில் போட்டும் இரு திறப்பினர்களும் நிகழ்ச்சி ஒன்றே இனையதளத்தில் நடத்துகிறார்கள் நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதுதான் நிஜம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full