லாக்டவுனில் சிம்பிளாக திருமணத்தை முடித்த அரண்மனைக்கிளி சீரியல் நடிகர் - புகைப்படங்கள் இதோ.

By Rajkumar · 5/7/2020

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மின்னலை விட வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். கொரோனா பரவலை தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் சுபகாரியங்கள் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பலரும் எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் தங்களுடைய திருமணத்தை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகர் தன்னுடைய திருமணத்தை எளிமையாக செய்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பிரபலங்களின் திருமணங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கு பெறுகின்றனர்.

இதையும் பாருங்க : விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட நபர் - நேரில் சென்று பார்த்த போலீசுக்கு ஏற்பட்ட ஷாக்.

பல பிரபலங்கள் தங்களின் திருமணத்தை எளிமயான முறையில் செய்து உள்ளார்கள். மேலும், இவர்கள் தங்களுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ரன். இந்த தொடரில் கிருஷ்ணா - சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் 'ரன்' தொடரில் வில்லனாக நடித்து மிரட்டியவர் விஜித் ருத்ரன். சீரியல் நடிகர் விஜித் ருத்ரன் ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்து உள்ளார்.

இவர் தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. அது இந்த நாளை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. உங்கள் அன்பை தொடர்ந்து வழங்குங்கள் என்று விஜித் ருத்ரன் கூறியுள்ளார். இதை பார்த்து விஜித் ருத்ரன் - விஷ்வ வினோதினி தம்பதிக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full