விஜய்யுடன் அந்த காட்சியில் நடிக்கும் போது அப்பாவிடம் திட்டு வாங்கினார்! - சங்கவி சொன்ன ஷாக் செய்தி.

By Manikandan · 7/1/2023

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த நடிகைகள் தற்போது செகண்ட் இன்னிங்ஸ்சில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் குடும்பம் குட்டி என சென்று விடுகிறார்கள். பின் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் நடிகை சங்கவியும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர்.

இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தந்தை மருத்துவர் ஆவார். பின் சங்கவி தன்னுடய 16 வயதிலேயே அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது. அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார். இவர் 95 படங்களுக்கு மேல் நடித்தார்.

அதுமட்டும் இல்லாமல் விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சங்கவி நடித்து இருக்கிறார்.90ஸ் சினிமா உலகில் சங்கவி ஒரு ரவுண்ட் வந்தார் என்றே சொல்லலாம் . மேலும், இவர் அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட பல படங்கல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறார்.

விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் நடிகை சங்கவி. இப்படத்திற்கு பிறகு இயக்குனர் விஸ்ணு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது விஜய் மற்றும் சங்கவி இடையே காதல் என்று பல விதமான கிசுகிசு அப்போது எழுந்தது. அதற்கு காரணம் சங்கவியும் விஜய்யும் நடித்த திரைப்படங்களில் மிகவும் நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல செய்தி ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில் சங்கவி இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தார் நடிகை சங்கவி. அதில் அவர் கூறியதாவது ` விஷ்ணு படத்தில் விஜய்யும், நானும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும் காட்சியில் நான் மூழ்கி எந்திருத்து விட்டேன் ஆனால் விஜய் நடுங்கி கொண்டிருப்பதை பார்த்த எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யை திட்டினார்.

மேலும் சில நெருக்கமான பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சங்கட்டமான நிகழ்வுகளும் நடந்திருப்பதாக சங்கவி கூறினார். சங்கவியை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த நடிகை கௌதமியும் இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும் என்று அதிர்ச்சியாகி கூறினார். நடிகை சங்கவி தற்போது சீரியல்களிலும், படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு அவ்வப்போது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full