நாய்க்கு பேனர் வைக்கிறார்கள்.! பின்னணி பாடகர் எஸ் பி பியின் பேச்சால் சர்ச்சை.!

By Rajkumar · 30/1/2019

கடந்த சில காலமாக தமிழ் திரையுலகில் உள்ள பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இளையராஜாவின் காப்புரிமை, சிவகுமார் செல்பி, வைரமுத்து metoo என்று பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கினர்.

அந்த வகையில் தற்போது பிரபல பிண்ணனி பாடகர் எஸ் பி பாலசுப்ரமனியனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் காலாட்சேப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.பி.பி, நாய்க்கு பேனர் வைக்கின்றனர் என்றும் சினிமாவில் பெண்கள் வாய்ப்பு பெறுவது குறித்து சர்ச்சையான கருத்தை பேசியுள்ளார்.

சினிமாவில் பெண்கள் வாய்ப்பு பெறுவதற்காக பெண்கள் அரைகுறை ஆடை அணிவது வேதனை அளிக்கிறது என்றார். வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் இப்படி துணிகின்றனர். இந்தளவிற்கு கலாச்சாரம் கீழ் இறங்கி போயிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், தனக்கு பிடிக்காத இரண்டு விடயம் என்றால் அது செல்பி எடுப்பது மற்றும் பேனர் வைப்பது தான். தற்போது உள்ள உலகத்தில் பிறந்த நாய்க்கு கூட பேனர் வைக்கின்றனர் என்று பேசியுள்ளார் எஸ் பி பி. சிவகுமார் வீடியோவை இன்னும் எஸ் பி பாக்கல போல.
 

Tamil Behind Talkies AMP · Quick view
View full