படம் ஓடவே ஓடாது - நயன்தாராவின் டெஸ்ட் படத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் கொடுத்த சாபம் - பின்னணி என்ன?
நயன்தாரா படத்தின் வாய்ப்பை இழந்த வேதனையில் நடிகர் எஸ்.வி. சேகர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் பாலிவுட்டில் நயன் நடித்த ஜவான் படம் பாலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
டெஸ்ட் படம்:
அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டெஸ்ட். YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறது. இந்த படங்களை எல்லாம் தயாரித்த சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிரது. pic.twitter.com/qIWnmi3SJK
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 6, 2025
எஸ்.வி.சேகர் பதிவு:
இந்த படத்தில் மாதவன், சித்தார்த், ஜாஸ்மின் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் எஸ்.வி சேகர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெஸ்ட் படம் பற்றி சொன்னது:
அதில் அவர், என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு நானாக விலகினாலோ, அவர்கள் விலகிவிட்டாலோ அந்த படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வராது. அப்படியே வந்தாலும் அந்த படம் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது என்று சொல்லி டெஸ்ட் படத்தினுடைய போஸ்டரை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் படத்திலிருந்து இவரை நீக்கிவிட்டதனால் தான் இவர் இப்படி கொந்தளித்து பதிவு போட்டிருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். அதோடு டெஸ்ட் படத்திற்காக இயக்குனர், எஸ்.வி சந்திரசேகரை சந்தித்து கதை சொன்னார். அவருக்கும் கதை பிடித்ததால் ஓகே சொல்லிவிட்டார்.
எஸ்.வி.சேகர் நீக்கப்பட்ட காரணம்:
பின் சூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு எஸ்.வி சேகரை சந்தித்த இயக்குனர், ஒரு சின்ன பிரச்சனை. சித்தார்த் உங்களுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். காரணம், சித்தார்த் ஒரு மோடி எதிர்ப்பாளர். நீங்கள் மோடிக்கு ஆதரவாளர். அதனால் அவர் உங்களுடன் நடித்தால் சோசியல் மீடியாவில் நிறைய ட்ரோல் செய்வார்கள். அதனால் அவர்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூறினார். உடனே எஸ்.வி.சேகர், எனக்கு 50 லட்சம் பணம் தர வேண்டும் என்று சொன்னார். இயக்குனர் ரெண்டு நாட்களுக்கு பின் கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார். அதில் இந்த படத்தில் உங்களை நடிக்க வைக்க முடியாது கதாபாத்திரம் மாற்றி விட்டோம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.