52வது திருமண நாளில் தன் காதல் மனைவிக்கு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த எஸ்.ஏ.சி - என்ன தெரியுமா?

By subhashini · 26/4/2025

தங்களின் திருமண நாளில் தன் மனைவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் காட்ஸ்லி கிப்ட் கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற இயக்குனராக எஸ்.ஏ. சந்திரசேகர் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. 40 வருடங்களுக்கு மேலாக இவர் சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான்.

எஸ் ஏ சந்திரசேகர் திரைப்பயணம்:

மேலும், இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள் . இந்த படம் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சந்திரசேகர் அவர்கள் இயக்குவதை விட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவர் 1973 ஆம் ஆண்டு சோபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எஸ்.ஏ.சி திருமண நாள்:

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். அதில் இவர்கள் மகள் சிறு வயதிலே இறந்து விட்டார். இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 52 ஆண்டுகள் ஆகிறது. தங்களுடைய 52வது திருமண நாளை சந்திரசேகர்- சோபா ஜோடி கொண்டாடுகிறார்கள். மேலும், இது தொடர்பாக எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய காதல் மனைவி சோபாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.
இது குறித்து வெளியிட்ட வீடியோவில் எஸ்.ஏ சந்திரசேகர், கல்யாணமாகி எனக்கு 52 ஆண்டுகள் ஆகிவிட்டது.

https://www.youtube.com/watch?v=84oQgAe7K8w

எஸ்.ஏ.சி வீடியோ:

இந்த 52 வருடத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ டார்ச்சர். அத்தனையும் தாங்கிக்கொண்டு ஒரு பொண்ணு என்னோடு வாழ்ந்திருக்கார். கல்யாண புதிதில் மனைவிக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால், இந்த 52வது திருமண நாளுக்காக என் மனைவிக்கு ஒரு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறேன். பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் காரை பரிசாக கொடுத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவு வெளியானதை தொடர்ந்து பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.

விஜய் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதை அடுத்து தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இதை அடுத்து விஜய் அவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full