எதிர்மறையான விமர்சனங்களை தாண்டி முதல் நாள் "சாமி2" செய்த வசூல் சாதனை.! எத்தனை கோடி தெரியுமா.

By Ajju · 22/9/2018
இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான "சாமி 2" படம் நேற்று வெளியாகியது. தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "சாமி" தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மாபெரும் ஹிட் ஆடைந்தது. ஆனால், "சாமி" படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான "சாமி 2" ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தில் இப்படம் முதல் நாள் மட்டும் எந்த அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்ததுள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விக்ரமி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இருந்தது. அதே போல நேற்று(செப்டம்பர் 21) மொகரம் பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால் திரையரங்கிகளில் ரசிகர்கள் கூட்டமும், குடும்ப ரசிகர்கள் கூட்டமும் அலைமோதியது. படம் முற்றிலும் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்தளும் நேற்று முதல் நாள் என்பதால் அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூல் செய்துள்ளது. முதல் நாள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் 64 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல தமிழகத்தில் 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்ககூடும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full