தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தனது 15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மஞ்சுமா நம்பியார் அதன் பின்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்த இவர் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை மஹிமா நம்பியார்.

Advertisement

சாட்டை படத்திற்கு பின்னர் மொசக்குட்டி குற்றம்23 கொடிவீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள் அண்ணனுக்கு ஜே மகாமுனி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தற்போது அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள அசுரகுரு படத்தின் ட்ரைலர்சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் கூட நடித்துள்ளார்.

தற்போது கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மஹிமா நம்பியார் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளத்தில் ஈர உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் நடிகை மஹிமா நம்பியார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இது ஒருபுறமிருக்க இவர் நடித்துள்ள அசுர குரு திரைப்படம் எந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது ஆனால் ஒருசில பிரச்சினை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தாமதம் ஆனது எனவே இந்த ஆண்டாவது இந்த படம் வெளியாகும் என்று மஹிமா நம்பியார் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்

Advertisement

Advertisement