கைகொடுக்காத சினிமா, கை கொடுத்த ஹோட்டல் வேலை, தற்போது திருமணத்தை முடித்த சாட்டை பட நடிகர்.
சட்டை படத்தில் நடித்த யுவன் என்ற அஜ்மல்கானுக்கு திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்தவர் யுவன். இவர் சாட்டை படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். 2012 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியிருந்த படம் சாட்டை.இந்த படத்தில் தம்பி ராமையா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஹீரோவாக யுவன் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் யுவனுக்கு வந்தது.
இவர் கமர்கட்டு, இளமை, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், சாட்டை படம் கொடுத்த அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.இதற்குப் பிறகு இவர் இயக்குனர் பாலாவின் படத்தில் நடித்த கமிட்டாகி இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படமும் கைவிடப்பட்டது. தற்போது யுவன் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் யுவன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பாலா சார் உடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எல்லா நடிகர்களுக்கும் கனவாக இருக்கும். எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது.அந்த கனவு காண வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால் நானாக சினிமாவில் இருந்து ஒரு கேப் எடுத்து கொண்டேன். பின் கொரோனா காலகட்டம் என எல்லாமே என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. பாலா சார் படத்துக்காக நான் போட்ட முயற்சியெல்லாம் வெளியில் யாருக்குமே தெரியாது.
பலரும் அந்த படத்தைப் பற்றி கேட்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வரவே கொஞ்ச நாள் ஆனது. அந்த படத்தில் நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் பையன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.அதனால் நான் நாகூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து பரோட்டா போட, காய்கறி கட் பண்ண, டீ போடலாம் கற்றுக் கொண்டேன். கடையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நான் நடிப்பதற்காக கற்றுக் கொண்டேன் என்பது தெரியும்.
கடைக்கு வருபவர்களுக்கு யாருக்குமே என்னை தெரியாது. ஒரு பெரிய டி ஷர்ட் எல்லாம் போட்டு கொண்டு அந்த கடையில் வேலை செய்யும் பரோட்டா மாஸ்டர் போலவே இருந்தேன்.படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் அனைத்தையும் கற்றுக் கொண்டு செய்து முடித்தேன்.அதற்குப் பிறகு படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் தேதியின் அறிவிப்பு வரை வந்தது. ஆனால், அதற்கு முன்பே பட கொஞ்ச நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாச்சியார் படத்தை பாலா சார் எடுக்க ஆரம்பித்து விட்டார். அது முடிந்த பிறகு மீண்டும் இந்த படத்தை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால், அந்த படம் ட்ராப் செய்யப்பட்டதாக சொல்லிவிட்டார்கள்' என்றும் கூறி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=OrmF3Na2xZU
இப்படி ஒரு நிலையில் அஜ்மல்கானுக்கு சமீரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணம் சென்னையில் விஜிபி ரிசார்ட்டில் நடந்துள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே வாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜிபி சந்தோசம், கிளாரியன் பிரஸிடென்ட் ஹோட்டல் அபூபக்கர், மன்சூர் அலிகான் ,ரியாஸ்கான் , உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்பட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள்.