பெரியார் படிப்பகத்தில் திருமணம் முடித்துவிட்டு இப்போ சபரி மலை மாலையா - புகழை விமர்சிக்கும் நெட்டின்கள்.

By Arun · 23/12/2022

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வெறும் தேடி வந்தவர் புகழ். முதலில் இவர் மெக்கானிக் கடையில் வேலை செய்து பின் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருந்தார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் வித் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த மூன்று சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

படங்களில் கலக்கும் புகழ் :

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் என்ற பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் புகழ் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக வெளிவந்த அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ்

View this post on Instagram

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

சுயமரியாதை திருமணம் :

இந்நிலையில் புகழ் கடந்த ஐந்து வருடங்களாக பேன்ஸி காதலித்து கடந்த சில மதங்களும் முன்னர் தான் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனனே கடந்த ஆண்டு தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளராக ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் பெரியார் படிப்பக்கத்தில் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர் இது பலரின் விமர்சனத்திற்காளாகியது.

சபரிமலையில் புகழ் :

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கன்னி சாமியாக குக் வித் கோமாளி புகழுடன் குக் வித் கோமாளி புகழும் சென்றிருக்கிறார். மேலும் புகழ் மாலை போட்டு இருமுடி கட்டி யாத்திரை செல்லும் காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி லைக்குகள் குவிந்து வருகிறது வருகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

ரித்திகா இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த வீடியோ பதிவு வைரலாகவே திருமணத்தை பெரியார் படிப்பக்கத்தில் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து விட்டு தற்போது சபரி மலைக்கு மாலை போட்டிருக்கிறார் விஜய் டிவி புகழ் என்றும் "ஏன்னா பெரியாரிஸ்டுட்க்கு வந்த சோதணை" என்று பலரும் கிண்டல் செய்து விஜய் டிவி புகழை கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full