சமீபத்தில் வெளியான விஜயகாந்த்தின் புகைப்படத்தை பார்த்து கலங்கி இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

Advertisement

உடல் நலக் குறைவால் இருக்கும் கேப்டன் :

அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர். ஒரு காலத்தில் எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே என்று கவலைப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த்தின் புகைப்படத்தை பார்த்து கலங்கி இருக்கிறார்.

Advertisement

Sac – விஜயகாந்த் உறவு :

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை சட்டம் ஒரு இருட்டறை ‘ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர்.  அதே போல நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், விஜய்க்கு திரைத்துறைக்கு ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது விஜய்காந்த் நடித்த செந்தூர பாண்டி ‘ என்ற படம் தான்.

Advertisement

நன்றி மறவாத விஜய் :

அந்த நன்றியை மனதில் இன்று வரை வைத்துள்ளார் நடிகர் விஜய். மேலும், எஸ்.யே. சி 1993 ஆம் ஆண்டு செந்தூர பாண்டி என்ற படத்தை எடுக்கும் போது விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தார் அப்போது அந்த படத்தில் நடிப்பதற்கு விஜய்காந்திடம் எஸ்.யே. சி சம்பளம் பேசிய போது நடிகர் விஜயகாந்த் சம்பளத்தை பற்றி எல்லாம் பிறகு பேசிக்கொள்வோம் முதலில் படப்பிடிப்பை தொடங்குங்கள் சார் என்று சொன்னாராம் கேப்டன்.

பழசை மறக்காத்த விஜயகாந்த் :

விஜயகாந்தும் நடித்து கொடுத்து அந்த படம் செம்ம ஹிட் அடிக்க, படம் வெளியான பின்னர் அந்த படத்தின் லாபத்தை விஜயகாந்திற்கு கொடுக்க, அவர் வாங்க மறுத்துவிட்டாராம். இது நான் செய்த உதவி உங்களுக்கு, இதற்கு காசு கொடுத்து என்னை கேவலப்படுத்தாதீங்க சார், 90 காலகட்டங்களில் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தாலும் தம்மை ஆளாக்கிய நபரை மதித்து பழசை மறக்காமல் விஜயகாந்த்தின் அந்த நல்ல மனசுக்குத்தான் அவரை எல்லோரும் இன்றும் கேப்டன் என்று அழைக்கிறார்கள் என்று கூறி இருந்தார்.

Advertisement